முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.
முடக்கத்தான் கீரை மருத்துவ பயன்கள்
- முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகின்றன.
- முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உணவுடன் உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.
- முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
- முடக்கத்தான் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி அகலும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.
- முடக்கத்தான் கீரையை வாய்வு பிரச்சனையால் அவதிபடுபவர்கள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
- மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது. ஒரு மேஜைக்கரண்டி முடக்கத்தான் கீரை சாறு பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும்.
- இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.
- முடக்கத்தான் கீரையானது முதுகு எலும்பு தேய்மானம், பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும்.
- இதை ஆரம்பத்தில் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒரு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம். மூளைக்கு பலம் தரும்.
- முடக்கத்தான் கீரையின் துவையலை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.