
பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
இந்த வீடியோவில் இரண்டு ராட்சத மலைப்பாம்புகளையும் ஒரு சிறுவனையும் காண முடிகின்றது. இதில் காணப்படும் காட்சிகள் காண்பவர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்.
மலைப்பாம்புகள் மற்றும் சிறுவனின் இந்த வீடியோவை, இது வெளிவந்த சில மணி நேரங்களுக்குள்ளேயே ஆயிரக்கணக்கானோர் பார்த்தனர்.

சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவில், ஒரு சிறுவன் மரத்தடியில் வசதியாக அமர்ந்திருப்பதையும், அப்போது திடீரென இரு மலைப்பாம்புகள் அவன் முன் வருவதையும் காண முடிகின்றது.
மலைப்பாம்பின் நீளம் 15 அடிக்கும் அதிகமாகவும், எடை 100 கிலோவுக்கும் அதிகமாகவும் இருக்கும் என வீடியோவைப் பார்த்தால் தெரிகிறது.
வீடியோவின் ஆரம்பத்தில் இரண்டு மலைப்பாம்புகளும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்குமோ என்ற சந்தேகம் வருகிறது.
அந்த சிறுவனுக்கு என்ன ஆகுமமோ என இந்த வீடியோவைக் காண்பவர்கள் கலங்கித்தான் போகிறார்கள்.
ஆனால் வீடியோவில் நாம் காணும் காட்சிகள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. ராட்சத மலைப்பாம்புகள் அந்த சிறுவனுக்கு எந்த தீங்கையும் விளைவிக்கவில்லை.
மாறாக, சிறுவனின் மடியில் ஒரு பாம்பு தன் தலையை வைத்துக்கொள்கிறது. மற்றொரு பெரிய பாம்பும் சிறுவனுக்கு பின்னால் அமர்ந்திருப்பதையும் காண முடிகிறது. அதுவும் சிறுவனை எதுவும் செய்யவில்லை.
சிறுவன் சிறு குழந்தையை சீராட்டுவது போல, தன் மடியில் தலை வைத்திருக்கும் பாம்பை பாசத்தோடு தடவிக்கொடுப்பதையும் வீடியோவில் காண்கிறோம். இது சொல்ல முடியாத அளவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் nature27_12 என்ற பெயரில் பதிவேற்றப்பட்டுள்ளது. எனினும், இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
ஐ