
திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை பஜனை கோயில் தெருவில் ஸ்ரீகிருஷ்ணர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் கடந்த 2 நாட்களுக்கு முன் பக்தர்கள் தரிசனத்துக்காக மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது காலை 7 மணியவில் கிருஷ்ணர்-ராதை சிலை மீது சூரிய ஒளி விழுந்தது.
இந்நிலையில், அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்து காலை 7 மணியளவில் சிறிது நேரம் கிருஷ்ணர்-ராதை சிலை மீது சூரிய ஒளி விழவே பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, கிருஷ்ணர் – ராதை சுவாமி சிலைகள் மீது சூரிய ஒளி விழுவதை அறிந்த சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் இந்த அரிய நிகழ்வை காண அதிகளவில் கோயிலுக்கு திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.