transfer - 2026

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: முக்கிய அறிவிப்பு!

சற்றுமுன் அடடே... அப்படியா? கல்வி தமிழகம்
transfer - 2026

இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் செயல்முறைகள் வெளியிட்டுள்ளது

2021-2022 ஆம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்தமை மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் குறித்து திருந்திய கலந்தாய்வு அட்டவணை வெளியிடுதல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிட்டுள்ளது.

இது குறித்த அரசாணையில்‌ 2021 – 2022ஆம்‌ கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள்‌ மாறுதல்‌, பணிநிரவல்‌ மற்றும்‌ பதவி உயர்வு சார்பாக பொது மாறுதல்‌ கலந்தாய்வுக்‌ கொள்கை வகுக்கப்பட்டு அறிவுரைகள்‌ வழங்கப்பட்டுள்ளது.

transfer - 2026

செயல்முறைகளின்‌ வாயிலாக பொது மாறுதல்‌, பணிநிரவல்‌ மற்றும்‌ பதவி உயர்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. தொடக்கக்‌ கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல்‌ மற்றும்‌ பொது மாறுதல்‌ கலந்தாய்வு இணைப்பில் கண்டுள்ள திருத்திய கால அட்டவணையின்படி நடைபெறும்‌ என அனைத்து மாவட்ட ‘இவ்விவரங்களை மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ மூலம்‌ ஆசிரியர்களின்‌ கவனத்திற்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.