
திரைப்பிரபலங்கள் பலரும் இந்த கொரோனா சூழலில் மரணம் அடைந்தனர்
இந்த சோக சம்பவங்கள் திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை உண்டு பண்ணியுள்ள சூழலில், தொடர்ச்சியாக திரை இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், தாமிரா, கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதேபோல் நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா உள்ளிட்டோரின் மரணம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே சின்னத்திரை நடிகை சித்ரா தொடங்கி முக்கிய நகைச்சுவை கலைஞர் வடிவேல் பாலாஜி, பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகர் ஜோக்கர் துளசி, பாரதி கண்ணம்மா நடிகரான வெங்கட் உள்ளிட்ட பலரும் மரணம் அடைந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த நெல்லை சிவா நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். இப்படி ஒரு நிலையில் தேன்மொழி சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் காலமாகி இருக்கிறார். இந்த சம்பவம் விஜய் டிவி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்த ஜாக்லின் கதாநாயகியாக நடித்து வரும் தேன்மொழி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான்.
இந்த சீரியலில் ஜாக்லினின் தந்தையாகவும் ஊராட்சி மன்ற தலைவராகவும் சுப்பையா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் குட்டி ரமேஷ்.
இவர் ஏற்கனவே பல்வேறு சீரியல்களிலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் உடல் நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

சன்.டிவி, விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் வெகு காலமாக சீரியல்களில் நடித்து வந்த குட்டி ரமேஷ் மரணம் அடைந்துள்ள செய்தியை விஜய் டிவி தமது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளது. இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.