திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஆவலா?

Published:

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக ஏப்,மே,ஜூன் மாதத்திற்கான ரூ300டிக்கெட் வரும் மார்ச் 21முதல் மூன்று நாட்களுக்கு வெளியிடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக ஏப்ரல் மாத தரிசனத்துக்கு திங்கட்கிழமையும் மே மாத தரிசனத்துக்கு மார்ச் 22-ந்தேதி, ஜூன் மாத தரிசனத்துக்கு மார் 23-ந் தேதி என 3 நாட்களில் ரூ.300 தரசன டிக்கெட்டுகள் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

மேற்கண்ட நாட்களில் காலை 9 மணி முதல் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் பக்தர்கள் தங்களின் தரிசன தேதியை குறிப்பிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரூ.300 டிக்கெட்டுகள் திங்கள் முதல் புதன் கிழமை வரை ஒரு நாளைக்கு 30 ஆயிரமும், வியாழன் முதல் ஞாயிறு வரை ஒரு நாளைக்கு 25 ஆயிரமும் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.அதேபோல் திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் தங்கும் விடுதி வளாகம், ரெயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜசாமி சத்திரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்ட்டர்களில் சாதாரண பக்தர்களுக்கு நேரில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் இதனை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வரலாம். இவ்வாறு திருமலை தேவஸ்தான செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

images 26 3 - 2026
ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Related articles

Recent articles

spot_img