நாடக உலகின் தந்தை தவத்திரு T.T.சங்கரதாஸ் சுவாமிகளின் 99வது குருபூஜை விழாவும், தமிழிசை நாடக நடிகர்கள் சங்க 12வது பொதுக்குழு கூட்டமும் நேற்று 31.03.2022 வியாழக்கிழமை மயிலாடுதுறை கங்கா காவேரி திருமண மண்டபத்தில்
நடைபெற்றது.
பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகவீரபாண்டியன் திருவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்து பேருரையாற்றினார். மயிலாடுதுறை வட்டாட்சியர் செ.ராகவன் நாடக கலைஞர்களை வாழ்த்தி பேசினார்.
ஜனபுனிதம் அறக்கட்டளையின் நிறுவனர் சிவத்திரு ஜனபுனிதர் சுவாமிகள் ஆசி வழங்கி பேசினார். இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன், பொது தொழிலாளர் சங்க செயலாளர், சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம், சண்முகதாஸ் மற்றும் நாடக நடிகர்கள் சங்க நிர்வாகிகள் சிறப்பு aழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.
தமிழ்நாடு அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்க தலைவர் “வளர்கலைமணி” ஜ.கிங் பைசல் நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்ததோடு தொகுத்து வழங்கினார்.