- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஐபிஎல் 2024 – 27.04.2024
இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.
டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
டெல்லி அணி (257/4, ஜேக் ஃப்ரேசர் மகுர்க் 84, ஷாய் ஹோப் 41, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 48*, அபிஷேக் போரல் 36, ரிஷப் பந்த் 29, அகசர் படேல் 11*) மும்பை அணியை (247/9, திலக் வர்மா 63, ஹார்திக பாண்ட்யா 46, டிம் டேவிட் 37, சூர்ய குமார் யாதவ் 26, இஷான் கிஷன் 20, சசிக் சலாம் 3/34, முகேஷ் குமார் 3/59) 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே டெல்லி அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான ஜேக் ஃப்ரேஸர் மகுர்க் (27 பந்துகளில் 84 ரன், 11 ஃபோர், 6 சிக்சர்) மற்றும் அபிஷேக் போரல் (27 பந்துகளில் 36 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர்.
மகுர்க் 7.3ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். பில் சால்ட் 9.4 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அச்சமயத்தில் அணியின் ஸ்கோர் 127/2. அவருக்குப் பின்னர் ஆடவந்த ஷாய் ஹோப் (17 பந்துகளில் 41 ரன்), ரிஷப் பந்த் (19 பந்துகளில் 29 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கட் இழப்பிற்கு 257 ரன் எடுத்திருந்தது.
258 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா (8 பந்துகளில் 8 ரன்,) நாலாவது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் (14 பந்துகளில் 20 ரன்) ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.
மூன்றாவதாகக் களம் இறங்கிய சூர்ய குமார் யாதவ் (13 பந்துகளில் 26 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) நெஹல் வதேர (4 ரன்), முகம்மது நபி (7 ரன்), பியுஷ் சாவ்லா (10 ரன்), ல்யூக் வுட் (9 ரன்) ஆகியோர் சொற்ப ரன்னுக்கு அவுட்டாயினர். திலக் வர்மா (32 பந்துகளில் 63 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்), ஹார்திக் பாண்ட்யா (24 பந்துகளில் 46 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்), டிம் டேவிட் (17 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) ஆகியொர் பொறுப்பை உணர்ந்து ஆடியும் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 247 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 10 ரன் கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டெல்லி அணியின் ஜேக் ஃப்ரேசர் மகுர்க் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறும். இரண்டாவது ஆட்டம் லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும்.
லக்னோ சூப்பட் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
லக்னோ அணியை (196/5, கே.எல். ராகுல் 76, தீபக் ஹூடா 50, சந்தீப் ஷர்மா 2/31) ராஜஸ்தான் அணி (199/3, சஞ்சு சாம்சன் 71*, துருவ் ஜுரல் 52*, ஜாஸ் பட்லர் 34, யஸஷ்வி ஜெய்ஸ்வால் 24, ரியன் பராக் 14) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று லக்னொவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே லக்னோ அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான க்விண்டன் டி காக் (3 பந்துகளில் 8 ரன், 2 ஃபோர்) முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ஃபோர் அடித்தார்; மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான கே.எல். ராகுல் (48 பந்துகளில் 76 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்) 17.2ஆவது ஓவர் வரை ஆடினார். மூன்றாவதாகக் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோயினிஸ் இன்று ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அவருக்குப் பின்னர் ஆடவந்த தீபக் ஹூடா (31 பந்துகளில் 50 ரன்), நிக்கோலஸ் பூரன் (11 ரன்), ஆயுஷ் பதோனி (ஆட்டமிழக்காமல் 18 ரன்), க்ருணால் பாண்ட்யா (15 ரன்) ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 5 விக்கட் இழப்பிற்கு 196 ரன் எடுத்திருந்தது.
197 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ஜாஸ் பட்லர் (18 பந்துகளில் 34 ரன்) ஆறாவது ஓவர் ஐந்தாவது பந்திலும் யஸஷ்வி ஜெய்ஸ்வால் (18 பந்துகளில் 24 ரன்,) ஏழாவது ஓவரின் முதல் பந்திளும் ஆட்டமிழந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் (33 பந்துகளில் ஆடமிழக்காமல் 71 ரன், 7 ஃபோர், 4 சிக்சர்), ரியான் பராக (14 ரன்), துருவ் ஜுரல் (34 பந்துகளில் ஆட்டமிழக்கமல் 52 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கட் இழப்பிற்கு 199 ரன் எடுத்து 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணியின் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறும். இரண்டாவது ஆட்டம் சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெறும்.
27.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
ராஜஸ்தான் | 9 | 8 | 1 | 16 | 0.694 |
கொல்கொத்தா | 8 | 5 | 3 | 10 | 0.972 |
ஹைதராபாத் | 8 | 5 | 3 | 10 | 0.577 |
லக்னோ | 9 | 5 | 4 | 10 | 0.059 |
டெல்லி | 10 | 5 | 5 | 10 | -0.276 |
சென்னை | 8 | 4 | 4 | 8 | 0.415 |
குஜராத் | 9 | 4 | 5 | 8 | -0.974 |
பஞ்சாப் | 9 | 3 | 6 | 6 | -0.187 |
மும்பை | 9 | 3 | 6 | 6 | -0.261 |
பெங்களூரு | 9 | 2 | 7 | 4 | -0.721 |