
விமான நிறுவனங்கள் விரும்பினால் 24 மணி நேர சேவை வழங்கப்படும் என
மத்திய அமைச்சர் வி.கே.சிங் பேட்டியளித்தார்.
நிறுவனங்கள் விரும்பினால்,அவர்களுக்கு தேவை இருக்கும் பட்சத்தில் மதுரை விமான நிலையத்தில் 24 மணிநேரசேவை அளிக்க தயாராக உள்ளோம் என மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
மதுரை விமான நிலைய விரிவாக்கம் செய்வதற்கான பணிகள்
நடைபெற்று வருகிறது. விரிவாகப் பகுதிக்குள் நீர்ப் பிடிப்பு பகுதி இருப்பதால் சிறிய பிரச்னை உள்ளது. இதுதொடர்பாக நிர்வாகத்துடன் ஆலோசித்து வருகிறோம். நீர்பிடிப்பு பகுதி இருப்பதால் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைப்பதற்கு முயற்சிக்கிறோம். ஓடுதளம் அமைப்பது, எப்படி உருவாக்குவது என்றும் திட்டமிடப்பட்டு வருகிறது. விமான நிறுவனங்கள் விரும்பினால் மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை அளிக்க தயாராக உள்ளோம். தற்போது கூட சென்னையில் இருந்து வந்தபோது விமானத்தில் முழுமையாக பயணிகள் இல்லை. விமான நிறுவனங்களுக்கு தேவை என்றால் இயங்குவதற்கு தயாராக இருக்கிறோம். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தேவையான அளவில் இருக்கின்றார்கள்.
இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். குறைபாடுகள் இருந்தால் உடனடியாக சரி செய்வோம் என்றார்.