பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்றிருந்தபோது, மோடியின் குர்தா போன்ற உடையலங்காரத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பாராட்டி, இது சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பாக உள்ளதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்திய பயணத்தில் உள்ள ஒபாமாவுடன் ஞாயிற்றுக்கிழமை தில்லி ஹைதராபாத் இல்லத்தில் சாய் பே சர்ச்சா என்ற வகையில், டீ குடித்த படி பேச்சுவார்த்தை நடத்தினார் மோடி. அப்போது, மோடி அணிந்திருந்த பந்த்கலா ரக உடையில், சிறு சிறு பளிச் கோடுகள் தென்பட்டன. ஆனால், உற்று கவனித்தபோது, அந்தக் கோடுகள் எங்கும் அவரது பெயர் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்தது. நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற அந்த எழுத்துகள் இப்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகின்றது. இவ்வளவு ”காஸ்ட்லி” உடை பிரதமருக்கு தேவையா என்று!
ஆனால், இது புதிதல்ல என்று கூறும் சிலர், எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் இதே போன்ற ரகத்தில் கோட் அணிந்திருந்தார் என்கின்றனர்.
முபாரக் போல் உடையெங்கும் தன் பெயர்: மோடியின் உடைக்கு எழுந்துள்ள விமர்சனம்
Popular Categories