ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கும் : தமிழிசை சவுந்தர்ராஜன்

ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ள நிலையில், மத்திய அரசு இதுதொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று பா.ஜ. க மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

  மேலும் இந்த ஆண்டு பொங்கலுக்குள், ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கும்.

அரசாணை மட்டுமே பிறப்பித்தால் போதுமானது, அவசரச் சட்டம் தேவையில்லை என்று கூறிய சட்ட வல்லுனர்களின் கருத்தின்படியே மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது. நல்லெண்ணத்தில்தான் இந்த அறிவிப்பை மத்திய அ்ரசு எடுத்தது. சிக்கல் வராது என்ற எண்ணத்தில்தான் அரசாணை மட்டும் பிறப்பிக்கப்பட்டது. எனவே சிக்கல்களை நிவர்த்தி செய்து ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அ்ரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.