கை போ சே ( Kai po che ) வில் அறிமுகமாகி தோணி மூலம் மிக பிரபலமாகி சிச்சோர் ( CHICHCHORE ) வெற்றியின் மூலம் பாலிவுட்டின் கவனிக்கத்த முன் வரிசை ஹிரரோக்களில் ஒருவரானவர் சுஷாந்த் சிங்க் ராஜ்புட் . ஆனால் துரதிருஷ்டவசமாக சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார் . இவரது கடைசி படம் தில் பச்சேரா ( DIL BACHERA ) வை டிஷ்னீ + ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியிட்டிருக்கிறார்கள் . அபோவ் ஆவெரேஜ் காதல் படம் ஹீரோவின் தற்கொலையால் அதிக முக்கியத்துவம் அடைந்திருக்கிறது …
இரண்டு கேன்சர் நோயாளிகளின் காதல் கதையே தில் பச்சேரா . சாவை நினைத்து கவலைப்படும் கிஸீ பாசு ( சஞ்சனா சங்கி ) வாழ்வில் அதை துளியும் சட்டை செய்யாத இளைஞன் ராஜ்குமார் இமானுவேல் ஜுனியர் ( சுஷாந்த் சிங்க் ராஜ்புட் ) நுழைந்த பிறகு என்ன நடக்கிறது என்பதே படம் . ஹீரோயின் பாய்ண்ட் ஆஃப் வியூவில் கதையை சொல்வதால் என்ன நடந்திருக்கும் என்பதை முன்பே யூகிக்க முடிகிறது …
சுஷாந்த் மணிரத்னம் பட ஹீரோ போல துறுதுறு வென இருக்கிறார். கேன்சரால் ஒரு காலை இழந்தாலும் செயற்கை காலுடன் இவர் ஆட்டம் பாட்டம் என வலம் வருவது லேசாக இடித்தாலும் தனது துள்ளலான நடிப்பால் அதை மறக்கடிக்கிறார் . இந்த படத்தை பார்க்க அவர் இல்லாதது காலக்கொடுமை . சஞ்சனா ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும் ஹீரோயினாக இதுவே முதல் படம் .
ஹீரோவிற்கோ இது கடைசி படம் . சஞ்சனா படம் நெடுக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியோடு வந்து நம்மையும் உச் கொட்ட வைக்கிறார் . ஹீரோயின் பெற்றோர்கள் இருவரும் இயல்பான நடிப்பில் கவர்கிறார்கள் . அதிலும் ஹீரோயின் அம்மா அவரை விட அழகாக பெங்காலி ரசகுல்லா போல இருக்கிறார் . கேசன்சரால் கண்ணை இழந்தாலும் நம்பிக்கை இழக்காமல் வரும் ஹீரோவின் நண்பர் கவனிக்க வைக்கிறார் …
சைஃப் அலி கான் சின்ன ரோலில் வந்தாலும் தனக்கே உரிய பாணியில் கவர்கிறார் . அவருடைய கேரக்டர் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை . ஆனாலும் அவர் பேசும் ” LIFE itself is Incomplete ” என்கிற வசனம் யோசிக்க வைக்கிறது . இந்த படம் ” The Fault in our Stars ” என்கிற நாவலை எடுக்கப்பட்டிருக்கிறது , ஆனால் இதே கதையம்சம் உள்ள இதயத்தை திருடாதே என்கிற படத்தை மணிரத்னம் முப்பது வருடங்களுக்கு முன்னரே எடுத்திருப்பார் . அந்த படமும் , இசைஞானியின் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் . இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நன்றாக இருந்தாலும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை …
இரண்டரை மணி நேரம் படத்தை இழுக்காமல் ஒண்ணே முக்கால் மணி நேரத்தில் முடித்தது நல்லது . ஆனாலும் டீட்டைலிங் இல்லாமல் ஒரு அவசர கதியில் முடித்ததும் , முன்னரே படம் எதை நோக்கி போகும் என்பதை யூகிக்க முடிந்ததும் சறுக்கல் . சுஷாந்த் சிங்க் அண்ட் சஞ்சனா நடிப்பு , சுஷாந்தின் நிஜ மரணம் , இதில் அவர் ரஜினியின் ரசிகராக வருவது இந்த கவன ஈர்ப்புகளுக்காக கூடுதல் ரேட்டிங் வழங்கலாம் .
DIL BACHERA – HEART TOUCHING
RATING : 3.5 * / 5 *
இந்த படத்தின் விமர்சனத்தை யூ டியூபில் காண கீழே சொடுக்கவும் .
விமர்சனம்: வாங்க ப்ளாக்கலாம் அனந்து