
-> செல்வ நாயகம்
“மோடி ஜியுடன் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டால், மோடி ஜி நம்மை ஒரு தலைவனாக அங்கீகரித்து விட்டார். நம்ம ஊர்ல அந்த ஃபோட்டோவை வச்சு ஓட்டிக்கலாம் என்ற நிலை! இதெல்லாம் இந்தியாவுக்கு ரொம்ப புதுசு” – திருப்பூர் தாராபுரத்தில் மாநில தலைவர் திரு. K.அண்ணாமலை அவர்களின் உரை…
1, “இன்னும் 3 நாட்களில் பாஜக தலைவர்கள், ஒவ்வொரு திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை, புகார்களை 5ஆம் தேதி காலை மதுரையிலிருந்து வெளியிட ஆரம்பிப்பார்கள். 5ஆம் தேதி பட்டியலை வெளியிட்ட பிறகு, 15ஆம் தேதிக்கு மேல், நம்முடைய ஆளுநரை சந்தித்து 700 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை பரிசாக வழங்கவிருக்கிறோம். அந்தப் புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களும் திராவிட மாடல் செய்திருக்கும் ஊழல்! இது ஒரு வருட ஆட்சியில் நடந்திருக்கும் ஊழல். மாறாக, மத்தியில் மோதி ஜியின் 8 ஆண்டு கால ஆட்சியில், ஒரு குண்டூசி கூட திருடு போனதாக புகாரில்லை”.
2, “இந்தியாவிலே மனித உரிமை மீறல் அதிகமாக இருக்கிறது. அதைப் பற்றி அமெரிக்க பாராளுமன்றத்தில் குழு போடப் போகிறோம்” என்று அமெரிக்க வெளியுறவு செயலர் சொன்னார். இதை 1957 முதல் அமெரிக்கா இந்தியாவை பார்த்து சொல்லிவருகிறது. அன்று இந்தியா பணிந்தது. ஒவ்வொரு முறையும் இதை சொல்லி இந்தியாவை அடக்குவார்கள் அமெரிக்கர்கள். அதைக் கேட்ட ஜெய்ஷங்கர் அவர்கள் சொன்னார், “தைரியமிருந்தால் போட்டுப்பார். அமெரிக்காவில் மனித உரிமை மீறல் பற்றி எங்கள் பாராளுமன்றத்தில் குழு போடுவோம்” என்று. அமெரிக்கா காரனக்கு ஒண்ணுமே புரியலை, “என்னடா நடக்குது இங்கே? 70 வருஷமா இந்தியாவை இப்படித்தான் வச்சு ஓட்டிக் கிட்டிருந்தோம். இன்னைக்கு புதுசா முதுகெலும்போட நேரா நிக்கறானுங்க.” என்று.
3, ஒவ்வொரு (சர்வதேச) மீட்டிங்கிலயும் மோடியை சுத்தி கூட்டம் போய்க்கிட்டிருக்கறாங்க. சமீபத்திலே ஒரு உயர் அதிகாரி என்னிடம் சொன்னார், “மோடி ஜி ஃபாரீன் மீட்டிங் போனா… அங்கே ஷெட்யூல்டு மீட்டிங்கே 3 மீட்டிங் இருக்கும். சமீபத்தில் மோடி ஜி ஜெர்மனி போயிருந்த போது, வெளிநாட்டு தலைவர்களெல்லாம் நம் அதிகாரிகளிடம் வந்து, ‘ஒரு 2 நிமிஷம் எனக்கு மோடி ஜியை பார்க்க டைம் குடுத்தீங்கன்னா, ஒரு ஃபோட்டோ மட்டும் எடுத்துட்டு போய்க் கிட்டே இருப்பேன்’ என்று! ஏனென்றால், இன்று உலகில் என்ன கருத்து இருக்கிறதென்றால், மோடி ஜியுடன் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டால், மோடி ஜி நம்மை ஒரு தலைவனாக அங்கீகரித்து விட்டார். நம்ம ஊர்ல அந்த ஃபோட்டோவை வச்சு ஓட்டிக்கலாம் என்ற நிலை! இதெல்லாம் இந்தியாவுக்கு ரொம்ப புதுசு. இதற்காகத் தான் தவமிருந்தோம்.
4, ஜன் தன் வங்கிக் கணக்குகள் 45 கோடி இருக்கின்றன. அந்த 45 கோடி வங்கி கணக்குகளுக்கு இது வரை மத்திய அரசு அனுப்பியிருப்பது 22 லட்சம் கோடி ரூபாய்! வங்கிக் கணக்கு இல்லாதிருந்தால், இந்த 22 லட்சம் கோடியில் குறைந்தது 5 லட்சம் திருடப்பட்டிருக்கும்.