திருப்புகழ்க் கதைகள் பகுதி 353
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
வரி சேர்ந்திடு – திருவேங்கடம்
13 நாள்களில் இரண்டு கிரகணங்கள் – 2
கிரகணம் ஏற்படக்கூடிய காலம் கிரகணப் பருவம் எனப் படுகிறது. ஒரு கிரகணப் பருவம் என்பது பூமியின் பார்வையில், கிரகணம் நடக்க அனுமதிக்க சூரியன் சந்திரக் கணுவிற்கு அருகில் இருக்க வேண்டும். பௌர்ணமியில் சூரியன் ஒரு சந்திர கணுவிற்கு அருகில் இருந்தால், நாம் ஒரு சந்திர கிரகணத்தைக் காண்கிறோம். அமாவாசையில் சூரியன் சந்திர கணுவிற்கு அருகில் இருந்தால், சூரிய கிரகணத்தைக் காண்கிறோம்.
சந்திர மாதம் (Lunar month) என்பது அடுத்தடுத்த புதிய நிலவுகள் (அமாவாசைகள்) அல்லது அடுத்தடுத்த முழு நிலவுகளுக்கு (பௌர்ணமிகள்) இடையிலான காலம் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 29.5 நாட்கள் அளவில் இருப்பதால், குறைந்தபட்சமாக, சூரியகிரகணத்தைத் அடுத்து ஒரு சந்திரன் கிரகணமோ அல்லது சந்திர கிரகணத்தைத் தொடர்ந்து ஒரு சூரியகிரகணமோ ஆக இரண்டு கிரகணங்கள் கிரகண பருவத்தில் நிச்சயமாக நிகழ்கிறது. அதிகபட்சம் மூன்று கிரகணங்கள் சாத்தியப்பட (சந்திர / சூரிய / சந்திர, அல்லது சூரிய / சந்திர / சூரிய), கிரகணப் பருவத்தின் முதல் கிரகணம் 29.5 நாட்கள் முடியும் முன் மூன்றாவது கிரகணத்தை அனுமதிக்க மிக விரைவாக வர வேண்டும். சூரிய கிரகணம் அமாவாசையில் மட்டுமே நிகழும். சந்திர கிரகணம் பௌர்ணமியில் மட்டுமே நிகழும். கூடுதலாக ஒரு கிரகணம் ஏற்பட அமாவாசை அல்லது பௌர்ணமி ஒரு கிரகணப் பருவத்திற்குள் நிகழ வேண்டும்.
சந்திரன் தெற்கிலிருந்து வடக்கே நகர்ந்து சென்றால், அது சந்திரனின் ஏறு கணு (Ascending node) என்றும், சந்திரன் வடக்கிலிருந்து தெற்கே நகர்ந்தால், அது சந்திரனின் இறங்கு கணு (Descending node) என்றும் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக கடந்த மே 24, 2020 அன்று சந்திரன் அதன் ஏறு கணுவில் கடைசியாக இருந்தது, அடுத்து ஜூன் 6, 2020 அன்று அதன் இறங்கு கணுவை அடையும்.
நடைபெறும் இருபத்தோராம் நூற்றாண்டில் (கிபி 2001 முதல் கிபி 2100 வரையிலான நூறு ஆண்டு காலத்தில்) 224 சூரிய கிரகணங்களும் 228 சந்திர கிரகணங்களும் ஆக மொத்தம் 452 கிரகணங்கள் நிகழும். பொதுவாக ஒரு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று கிரகணப்பருவங்கள் (Eclipse season) இருக்கலாம். அது போலவே ஒரு கிரகணப்பருவத்தில் குறைந்தது இரண்டு கிரகணங்களும் அதிகபட்சமாக மூன்று கிரகணங்களும் நிகழலாம்.
ஓராண்டில் நான்கு கிரகணங்கள் நடப்பது மிகவும் இயல்பானது. ஒரு கிரகணப்பருவத்தில் சந்திர கிரகணத்தைத் தொடர்ந்து சூரிய கிரகணமோ அல்லது சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து சந்திர கிரகணமோ நிகழ்வது மிகச் சாதாரணமான விஷயம். ஒரு கிரகணப்பருவத்தின் காலம் (Eclipse season) என்பது முப்பத்தைந்து (35) நாள் கொண்டது எனலாம். இந்த முப்பத்தைந்து நாட்களில் குறைந்தது ஒரு சூரிய கிரகணமும் ஒரு சந்திர கிரகணமும் ஆக இரண்டு கிரகணங்கள் உறுதியாக ஏற்படும். அவ்வாறான நிகழ்வு இந்த நூற்றாண்டில் எண்பத்திரண்டு (82) முறைகள் நிகழும்.
அடுத்தது சனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான ஒரு நாள்காட்டி ஆண்டில் (Calendar year) குறைவான எண்ணிக்கையில் மூன்று சூரிய கிரகணங்கள் மற்றும் அதை விடக் குறைவான எண்ணிக்கையில் நான்கு சூரிய கிரகணங்களும் அபூர்வமாக ஐந்து சூரிய கிரகணங்களும் கூட ஏற்படுவதுண்டு.
இந்த நூற்றாண்டைப் பொறுத்தவரையில், 2018, 2019, 2036, 2038, 2054, 2057, 2058, 2069, 2083, 2084, 2087, 2098 ஆகிய 12 ஆண்டுகளில் மூன்று முறை சூரிய கிரகணமும், 2011, 2029, 2047, 2065, 2076, 2094 ஆகிய ஆறு ஆண்டுகளில் நான்கு முறை சூரிய கிரகணமும் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடக்கும் 21 ஆம் நூற்றாண்டில் எந்த ஒரு ஆண்டிலும் ஐந்து (5) சூரிய கிரகணங்கள் ஏற்படும் நிகழ்வு இல்லை.
ஆனால் அத்தகைய அபூர்வ நிகழ்வு 23ஆம் நூற்றாண்டில் 2206ஆம் ஆண்டில் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவ்வாண்டின் சனவரி 10, ஜூன் 07, ஜூலை 07, டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 30 ஆகிய நாட்களில் சூரிய கிரகணம் ஏற்படும். நம் சந்ததியில், யாராவது மாணவச் செல்வங்களுக்கு, பேரன் பேத்திகளுக்கு இக் கட்டுரையைப் பற்றிச் சொல்லி அவர்கள் அதனை ஆர்வத்துடன் நினைவுகூறலாம்.
ஒவ்வொரு நாள்காட்டி ஆண்டிலும் (Calendar year) அதாவது சனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான ஆண்டுக் காலத்தில் குறைந்த பட்சமாக நான்கு (4) முதல் அதிக பட்சமாக ஏழு (7) கிரகணங்கள் நிகழக் கூடும். ஒரு காலண்டர் ஆண்டில் ஏழு கிரகணங்கள் நிகழ்வது மிகவும் அரிதானது.
இத்தகைய நிகழ்வு கடைசியாக நடந்தது 1982இல் ஆகும். நடக்கும் இருபத்தோராம் நூற்றாண்டில் வருகின்ற 2038 மற்றும் 2094 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டுமே ஒரு நாட்காட்டி ஆண்டில் ஏழு கிரகணங்கள் நிகழும். 2038 ஆண்டில் நிகழவிருக்கும் கிரகணங்களில் 3 சூரிய கிரகணங்களும் 4 சந்திர கிரகணங்களுமாக இருக்கும் அதுவே 2094 ஆம் ஆண்டில் 4 சூரிய கிரகணங்களும் 3 சந்திர கிரகணங்களுமாக இருக்கும்.