spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்காசி தமிழ் சங்கமம் - ஒரு நிறைவான தொடக்கம்!

காசி தமிழ் சங்கமம் – ஒரு நிறைவான தொடக்கம்!

- Advertisement -

கே.அண்ணாமலை, (மாநிலத் தலைவர், பாஜக.,)

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே… அனைவருக்கும் வணக்கம்.

இன்றைக்கு காசிக்குச் சென்று இருந்த பனிரெண்டாவது ரயிலின் பயணிகளும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவர்கள் கலந்து கொண்ட நிறைவு விழாவில் பங்கேற்று தற்போது சென்னைதிரும்பி விட்டனர். காசியில் இருந்து திரும்பிய ஒவ்வொரு சிறப்பு அழைப்பாளரிடமும் கேட்டுப் பார்த்தால் அவர்கள் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கட்டுரையாக அல்ல தனி புத்தகமாகவே போடும் அளவுக்கு செய்திகளை அள்ளித் தருகிறார்கள்.

காசியில் அவர்கள் சென்று பெற்ற அனுபவங்கள், அவர்கள் சந்தித்த நபர்கள், தரிசித்த திருத்தலங்கள், பயணித்த சிறப்பான சுற்றுலா தளங்கள், பெற்ற விருந்தோம்பல், என்று ஒரு ஆனந்த அனுபவத்தை ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் இந்தியா பல்லாயிரம் ஆண்டுகளாக பல்வேறு ஆட்சியாளர்களால் பல்வேறு பிராந்தியங்களாக, ஆட்சி செய்யப்பட்டு வந்தது. ஆனாலும் பாரத தேசம் ஆன்மீகத்தால், யாத்திரிகர்களால், வழிபாட்டு முறைகளால் கலாச்சாரத்தால் ஒன்றிணைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு நபரும் வடக்கிலிருந்து தெற்காகவும்
கிழக்கில் இருந்து மேற்காகவும் மாறி மாறி மேற்கொண்ட பயணத்தால் பாரதம்
ஒன்றிணைக்கப்பட்டு இருந்தது.

உணர்ச்சிகரமான அந்த அனுபவங்களை எல்லாம் உலகிற்கு எடுத்துச் சொல்ல சமுதாயத்தின் இதயத்திற்கு புரிய வைக்க மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மேற்கொண்ட உன்னதமான முயற்சி இந்த காசி தமிழ் சங்கமம்.
தமிழுக்காக இப்படி ஒரு சிறப்பான விழா எடுப்பதற்கு என்ன காரணம் என்றும், இதனால் என்ன பலன் என்றும் பலருக்கு ஒரு கேள்வி எழக்கூடும். அவர்களுக்காக ஒரு சில உண்மைகளை இங்கே எடுத்துரைக்கிறேன்.

தமிழ் மொழியின் அருமைகளையும், பெருமைகளையும், சிறப்புகளையும் மொழியின் மேன்மையையும் தமிழ் நாட்டுக்குள்ளேயே தமிழர்கள் மத்தியில் தமிழ்
மொழியில் மட்டும் சொல்லிக் கொண்டிருப்பதால் என்ன பயன்? என் தாய் சிறப்புக்குரியவள் என்பதை நான் என் வீட்டிற்குள்ளே மட்டும் சொல்லிக் கொண்டிருப்பது நல்லதா? அல்லது தாயின் பெருமையை நான் ஊர் அறிய, மற்றவர்களுக்கு, அவர் மொழியில் எடுத்துச் சொல்வது நல்லதா? ஆகவே, தமிழின்
பெருமைகளை தமிழ் நாட்டுக்குள் மட்டும் பேசாமல், உலகையே பேச வைத்த உத்தமர், நம் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.

முதலாக பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் வரை எங்கும் நடைபெறாத
வகையில் ஒரு மிகச் சிறப்பான, தமிழுக்கான தனித்துவ சிறப்பு விழாவை, தொடர்ந்து 30 நாட்கள் நடத்தி இருக்கிறார். இதுபோன்ற சிறப்பான ஒரு
நிகழ்வு, இதற்கு முன்னர் எந்த ஆட்சியாளராலும், எந்த கட்சியாலும், எந்த தனி நபராலும், எந்த தமிழ் அமைப்புக்களாலும் கூட நடத்தப்பட்டதில்லை.

முதலில், தமிழன்னையின் பெருமையை, சிறப்புகளை உத்தரப்பிரதேசத்தில் அந்த
மாநிலத்தின் மூத்த தலைவர்களை முன்னிறுத்தி பேசியது போற்றுதலுக்குரியது. மேலும், தேசியத் தலைவர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் தமிழின்
பெருமையை, பிற மொழிகளில் பேச வைத்த காசி தமிழ்ச் சங்கம், தமிழ் அன்னைக்கு சூட்டப்பட்ட தனிச்சிறப்பான மணிமகுடம். இரண்டாவதாக, மொழிகளால் தனியாகப் பிரிக்கப்பட்டு, பேசும் மொழி அடிப்படையில் மாநிலங்களாக படைக்கப்பட்ட இந்தியாவில்,அந்த மொழியின் மூலமே இந்தியாவை
ஒன்றிணைக்கும் அருமையான முயற்சி காசி தமிழ்ச் சங்கமம். அதாவது முதல் பிரிவினையே மொழி அடிப்படையிலான பிரிவினை…. அதுவே, மற்ற அத்தனை பிரிவினைகளுக்கும் அடிப்படையாக விளங்குகிறது ஆகவே இந்தியாவின்
ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்க அந்த மொழியையே ஊடகமாக பயன்படுத்திய உன்னத முயற்சி காசி தமிழ் சங்கம். மொழிகளால் பிரிக்கப்பட்ட மாநிலங்களை
மொழிகளாலேயே ஒன்றிணைக்க எடுக்கப்பட்ட வெற்றி முயற்சி காசி தமிழ் சங்கம்…
தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட, பல்வேறு தமிழ் அறிஞர்களும் கலைவாணர்களும் வித்தகர்களும் கலந்து கொண்ட கலாச்சார பரிமாற்ற நிகழ்வுகள்
காசி மாநகரில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி நம் தேசிய கவி சுப்பிரமணிய பாரதி அவர்களின்
நினைவு தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மூத்த தலைவர், மணிப்பூர் மாநில ஆளுனர் திரு இல.கணேசன் அவர்கள், மற்றும் மத்திய அமைச்சர் திரு. அனுராக் சிங் தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். பாரதியின் வழித்தோன்றல்கள் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்ற உணர்ச்சிமயமான நிகழ்வுகள் காலப்பதிவுகள்.இந்த அருமையான விழாவில் நம் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் ஆற்றிய உரை மிகச்சிறப்பானது

நண்பர்களே, நம் நாட்டின் மொழிகளிலேயே, உலகின் தொன்மையான மொழி என்ற சிறப்புக்குரியது, தமிழ் மொழி. அதை நம் பாரத நாடே மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்ற பேரவாவில் காசி தமிழ்ச் சங்கமம் கொண்டாடப்ப்டுகிறது. அதை உணர்ந்தவராகத்தான் இனி, இங்கிருந்து தான் ஒரு புதிய பாரதத்தின் உன்னதக் கலாச்சாரம் உருவாகப் போகிறது.

சங்கமத்திற்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களை, அறிஞர்களை,
இரண்டு லட்சத்திற்கும் அதிகமான காசிவாசிகள் மனதார வரவேற்று, தமிழர்கள்
மறக்க முடியாத அளவிற்கு, உபசரித்தார்கள். அவர்களுக்கு என் நன்றி. காசி தமிழ்
சங்கமம், கற்பனையாக உருவாக்கப்பட்டிருந்த பல தடைகளை உடைத்தெறிந்து
இருக்கிறது. தமிழகத்தின் மேன்மையான கலாச்சாரத்தையும், ஒப்பற்ற காசியின் உயர் கல்வி ஞானத்தையும், ஒன்றிணைக்க இந்த சங்கமம், ஒரு உறவு
பாலத்தை உருவாக்கியிருக்கிறது.

நண்பர்களே இனி, இங்கிருந்து தான் ஒரு புதிய பாரதத்தின் உன்னதக் கலாச்சாரம் உருவாகப் போகிறது. சங்கமத்திற்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களை, அறிஞர்களை, இரண்டு லட்சத்திற்கும் அதிகமான காசிவாசிகள் மனதார வரவேற்று, தமிழர்கள் மறக்க முடியாத அளவிற்கு, உபசரித்தார்கள். அவர்களுக்கு என் நன்றி. அற்புதமான தமிழின் கடை வடிவங்களான கரகாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் பொய்க்கால் குதிரை ஆகியவற்றை மேடையில் அரங்கேற்றினார்கள். வியந்து போனேன்.

பாரத பிரதமர் மோடி அவர்களின் சிந்தையில் உதித்த அற்புதமான, ஆக்கபூர்வமான சிந்தனை என்று பத்திரிகையாளர்கள் வியந்து பாராட்டும் இந்த காசி தமிழ் சங்கமும் உன்னதமானது நம் பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் உருவாக்கிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படை… அவரவர் தங்கள் சொந்த தாய் மொழியில் உயர்
கல்வி படிக்க வேண்டும் என்பதே. நான் தமிழக அரசை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்வி பாடத்திட்டத்தை தமிழ் மொழியில்
உருவாக்குங்கள். தாய்மொழி தமிழில் தமிழர்கள் கல்வி கற்கும் போது தான் ஒப்புயர்வற்ற ஞானப் பரம்பரையை நம்மால் உருவாக்க முடியும்.காசி
தமிழ் சங்கமம், கற்பனையாக உருவாக்கப்பட்டிருந்த பல தடைகளை உடைத்தெறிந்து இருக்கிறது.

தமிழகத்தின் மேன்மையான கலாச்சாரத்தையும், ஒப்பற்ற காசியின் உயர் கல்வி ஞானத்தையும், ஒன்றிணைக்க இந்த சங்கமம், ஒரு உறவு பாலத்தை ருவாக்கியிருக்கிறது.

நண்பர்களே! நம்பிக்கைக்கும், அன்பிற்கும் ஒரு பொருத்தம் என்னவென்றால்,
இரண்டையும் கட்டாயமாக வரவழைக்க முடியாது.நம்பிக்கை உருவாக்க முதலில் நம்ப வேண்டும்.அன்பை உருவாக்க அன்பு செலுத்த வேண்டும். சுதந்திர பொன் விழாவிலே, காசி தமிழ் சங்கமம் அளவு கடந்த நம்பிக்கையையும், அளவற்ற அன்பையும் தமிழக மக்களிடத்தில் உருவாக்கி இருக்கிறது என்ற முத்தாய்ப்பான உரை நிகழ்த்திய மத்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள். அவர் சொன்னது போல் இது முடிவல்ல தொடக்கம், நிறைவான தொடக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe