இந்தியாவில் உணவகங்கள் விளம்பரத்திற்காக உணவு பிரியர்களை குறி வைத்து அவ்வப்போது உணவு சேலஞ்ச் அறிவிப்பது தொடர்ந்து வருகிறது .
அந்த வகையில் , தில்லியில் உள்ள Big Momos world என்ற உணவகம் அறிவித்திருக்கும் ஃபுட் சேலஞ்ச் நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது .
பதினைந்து நிமிடத்தில் முப்பத்தி ஐந்து மோமோஸ்களை எந்த இடையூறும் இல்லாமல் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டால் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
இதில் நிபந்தனையாக போட்டில் பங்கேற்போர் முன்பே அந்த 35 மோமோஸ்களுக்கான கட்டணத்தை கட்டிவிட வேண்டும் , போட்டியில் வென்றவர்கள் மீண்டும் பங்கேற்க கூடாது .
இந்த போட்டி குறித்து கேள்விபட்ட ஃபுட்டி யூடியூபரான விஷால் என்பவர் மோமோ சேலஞ்சில் பங்கேற்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் .
இருப்பினும் தான் வென்ற அந்த 1 லட்ச ரூபாயில் பாதியை உணவகத்திடமே திருப்பி கொடுத்த விஷால் எஞ்சிய பணத்தை பணியாளர் ஒருவருக்கு கொடுத்திருக்கிறார்
இது தொடர்பான வீடியோவை விஷால் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றியிருக்கிறார் . இதுவரை இரண்டரை லட்சத்துக்கும் மேலானோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர்.