கம்பம்: ரஜினி மக்கள் மன்றம் அறிவிக்கப்பட்ட பிறகு கம்பம் நகரில் முதல் முறையாக நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.
ரஜினி மக்கள் மன்ற தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலர் ஸ்டாலின் ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 150 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தையல் எந்திரங்கள், சலவைப் பெட்டிகள், அடுக்குப் பாத்திரங்கள், ஊனமுற்றோருக்கான சைக்கிள்கள், மாணவ மாணவிகளுக்கு எழுது பொருட்கள், நோட்டுகள் என பரிசுகளை மன்ற நிர்வாகிகளை வைத்து வழங்கச் செய்த ஸ்டாலின், இது குறித்துக் கூறியபோது, “எல்லோரும் அடுத்தவரிடம் வசூலித்து நலத்திட்ட உதவிகள் செய்வார்கள். நான் என் பணத்தை எடுத்துதான் செலவு செய்துள்ளேன். அது ரஜினியிடம் கற்றதுதான்” என்றார்.