பூணூலைக் கழற்றி எறிந்தாலும் கமலை ‘கொள்கைப் படி’ தி.க., ஏற்றுக் கொள்ளாது!

திக - பார்ப்பனர்களை அமைப்பு சட்ட ரீதியாகவே உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளாது! பரமக்குடி அய்யங்கார் பூணூலை அணிந்து கொள்வதோ, அறுத்தெறிவதோ அவருடைய விருப்பம்!

நியூஸ் 7 டி.வி.யின் கேள்வி நேரம் நிகழ்ச்சியில் ஜுன் 29 அன்று பேசிய தனியரசு எம்.எல்.ஏ., “திமுக வில் பிராமணர்களுக்கு அனுமதி இல்லை” என்கிறார்.

“நான் தவிர்க்கும் நூல் பூணூல்” என்கிறார் கமலஹாசன்! இது தொடர்பான சில வரலாற்றுத் தகவல்கள்!

திமுக தொடங்கப் பட்டவுடன் அதன் சட்ட ஆலோசகர் வி.பி.ராமன் – பிராமணர். (பிரபல டிவி நடிகர் மோகன்ராமின் தகப்பனார்).

சென்னை மாநகராட்சிக்கு சுழற்சி முறையில் – பிராமணர், தலித், பிராமணரல்லாதவர், கிறிஸ்தவர்..- என்று சுழற்சி முறையில் மேயர்கள் ஒரு காலத்தில் தேர்வு செய்யப்பட்டனர். அந்த Turn படி திமுக சார்பாக இருந்த ‘பிராமண’ மேயர் காமாட்சி ஜெயராமன்.

நடிகை குமாரி சச்சுவின் அக்கா நாடக நடிகை மாடிலட்சுமி திமுக பிரசார பீரங்கியாக இருந்தார்!

திமுகவை அண்ணா தொடங்கிய போது ‘திராவிட-ர்- கழகம்’ என்பதில் ‘ர்’ ஐ நீக்கி ‘திராவி-ட- முன்னேற்றக் கழகம்’- என்று பெயரிட்டது தற்செயலானது அல்ல!

‘திராவிட’ – என்பது நிலப்பரப்பைக் குறிக்கும் என்றும், இந்த நிலப்பரப்பில் வாழும் சமூகத்தின் முன்னேற்றத்தை ‘யாரெல்லாம்’- நாடுகிறார்களோ அவர்கள் அனைவரையும் திமுகவில் இணைய அண்ணாதுரை அழைப்பு விடுத்தார். அதற்கு ஏற்பவே ‘திமுகவின் லட்சியங்களை ஏற்கும் – ‘எவரும்’ – என்று திமுகவின் அமைப்புச் சட்ட விதி உண்டாக்கப்பட்டது.

ஆனால் -திராவிட’ர்’ கழகத்தில் (திக)- அந்த இயக்கத்தின் கொள்கையை ஏற்கும் “பார்ப்பனர் அல்லாத எவரும்”- உறுப்பினராகலாம்! அதாவது திக கொள்கையை ஏற்றுக் கொள்பவராக இருந்தாலும் “பார்ப்பனருக்கு”- உறுப்பினராக அனுமதி இல்லை.

சுருக்கமாகச் சொன்னால் கமலஹாசன் பூணூல் ‘அணிந்தபடியே’ திமுக வில் உறுப்பினராக இருக்கலாம். (பல தேவாங்கச் செட்டியார்கள்/ சௌராட்டிரர்கள் அப்படி திமுக வில் உள்ளனர்). ஆனால் பூணூலை அறுத்து எறிந்தாலும், பிறப்பால் பார்ப்பனராகிய கமல் திகவில் சேர முடியாது!!

திமுக / திக இரண்டுமே அடிப்படையில் பிராமண விரோத இயக்கங்கள்தான்! திமுக – உறுப்பினராகவோ, கூட்டாளியாகவோ ஒரு தேவை கருதியாவது பிராமணர்களை சேர்த்துக் கொள்ளும். ராஜாஜியை ‘மூதறிஞர்’ ஆக்கித் தங்களுடன் கூட்டணியில் வைத்துக் கொண்டது போலவாவது வைத்துக் கொள்ளும். தேவை முடிந்ததும் – ‘தேர்தல் முடிந்தது; தேனிலவு கழிந்தது’- என்று ராஜாஜியைக் கழட்டி விட்டது போல திமுக கழட்டிவிடும்!

திக – பார்ப்பனர்களை அமைப்பு சட்ட ரீதியாகவே உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளாது! பரமக்குடி அய்யங்கார் பூணூலை அணிந்து கொள்வதோ, அறுத்தெறிவதோ அவருடைய விருப்பம்!

ஆனால் அணிந்து கொண்டாலும், அறுத்தெறிந்தாலும் இவரை அவர்கள் அண்டவிட மாட்டார்கள் – கறிவேப்பிலைக் கொத்து போல் காரியம் முடிந்ததும் தூக்கி எறிவார்கள்! ஆனானப்பட்ட ராஜாஜியே ஆடிக் காற்றில் பறந்த போது, இந்த அய்யங்கார்வாள் எம்மாத்திரம்?!!

– முரளி சீதாராமன்