spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருநாமங்கள் காட்டும் தலைமைப் பண்புகள்: கடல் வண்ணன்!

திருநாமங்கள் காட்டும் தலைமைப் பண்புகள்: கடல் வண்ணன்!

- Advertisement -

கடல் வண்ணன் திருநாமம்

மகர சடகோபன், தென்திருப்பேரை

நம்மாழ்வார் திருவாய்மொழியில் தென்திருப்பேரை எம்பெருமானை ” கண்டதுவே கொண்டு எல்லோரும் கூடிக் கார்க் கடல்வண்ணனோடு என் திறத்துக் கொண்டு ” என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.

  1. கடலின் ஒரு குணம் புல் , துரும்பு போன்ற பதர்களை அலைமேல் அலை வந்து வெளியே தள்ளிவிடும். முத்து, ரத்தினம் போன்றவற்றை வெளியே தள்ளாமல் உள் வாங்கிக் கொண்டிருக்கும். அதுபோல் தலைவன் தீயவற்றைப் பதர்கள் போல் நீக்கி, நல்லவற்றை முத்து, ரத்தினம் போல் உள்வாங்கி செயல் செய்து இருக்கவேண்டும்.
  2. கடலில் சிறு மீன் முதல் திமிங்கிலம் வரை அடைக்கலம். கிளிஞ்சல் முதல் ரத்னம் வரை அடைக்கலம். அதேபோல் தலைவன் என்பவன் சிறியவர் பெரியவர், இருப்பவர் இல்லாதவர், ஏழை பணக்காரர் என்ற அனைத்து மக்களின் பிரதிநிதியாக இருக்கவேண்டும்.
  3. கடலிருந்து நீரை முகந்து மேகம் மழை பெய்கிறது. ஆனால் வித்தியாசம் பாராமல் எல்லா இடத்திலும் பெய்கிறது. இல்லாத இடத்தில் அதிகம் பெய்தால் நன்மை பயக்கும். இருக்கும் இடத்தில் பெய்தால் பலன் குறையும். கடலில் பெய்தால் உபயோகம் இல்லை. அதுபோல் தலைவன் என்பவன் தான் பெற்ற கல்வி, அனுபவம் முதலியவற்றைச் சரிவரப் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.
  4. கடல் என்பதில் வரவு செலவு என்பது சமமாக இருக்கவேண்டும். நதிகளின் சங்கமம் என்பது வரவு , கடலிலிருந்து மேகம் உருவாகுவது என்பது செலவு. அந்த செலவு என்பது வரவுக்கு வழி வகுக்கவேண்டும். தலைவன் என்பவன் வரவு செலவு கணக்குகளைக் கடல் போல் நிர்வகிக்க வேண்டும்.
  5. கடல் என்பது பொதுவாக அமைதியாக இருக்கும். மனதிற்கு மகிழ்ச்சியை உருவாக்கும். சில சமயங்களில் தவறாக அணுகி உபயோகம் செய்தால் சீற்றம் கொண்டு அழித்து விடும். தலைவனின் செயல்கள் பொதுவாக அமைதி, மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் அமைந்திருக்கும். அரிதாகச் சீற்றம் கொண்டவனாக இருப்பான். சீற்றம் என்பது தவறான ஒன்றல்ல, சில சமயங்களில் சில இடங்களில் அந்தத் தன்மை தேவையான ஒன்றாக இருக்கும்.
  6. கடல் முன்னீர் என்று பெயர் பெற்றிருக்கும். எல்லாவற்றுக்கும் முன்னே உண்டான நீர் என்பது பொருள். அதேபோல் தலைவன் என்பவன் முன்னின்று அனைத்து காரியங்களையும் வழிநடத்தவேண்டும்.
  7. கடல் முன்னீர் என்பதல்லாமல் முந்நீர் எனப்படுவதுமுண்டு. மூன்று நீர்கள் அதாவது ஆற்று நீர், ஊற்று நீர் , மழை நீர் கலக்கும் இடமாகக் கடல் உள்ளது என்பதனால் முந்நீர் என்று அழைக்கப்படுகிறது. தலைவன் என்பவன் முக்கரணங்களால் அதாவது மனம் வாக்கு செயல் என்ற மூன்றையும் , ஒரே நிலைப்பாட்டில் நின்று

செயல்படுத்துவானாக இருக்கவேண்டும்.

  1. கடல் மிகவும் ஆழமுடையது. அதேபோல் தலைவனின் அறிவு, அனுபவம், அன்பு, பாசம் போன்றவை ஆழமாக இருக்க வேண்டும்.ஆழமாக இருந்தால்தான் தேசம் மற்றும் பெரு நிறுவனங்களை நிர்வகிக்க முடியும்.
  2. கடல் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். கடல் நீர் , உப்புக் காற்று போன்றவை நோய் நிவாரணம் அளிக்கிறது. அதேபோல் தலைவன் என்பவன் மன அமைதியுடன் குளிர்ந்த முகத்துடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும். மக்களுக்குப் பசிப்பிணியிலிருந்து நிவாரணம் அளிக்கவேண்டும்.
  3. கடல் சந்திரனைக் கண்டால் பொங்கும். அதேபோல் தலைவன் மக்களைப் பார்த்துப் பொங்கியெழ வேண்டும். பொங்கியெழுந்து மக்களுக்கு நன்மை செய்திட வேண்டும்.
  4. கடலின் கரையில் நின்று பெரும்பாலார் அதன் அழகையும், பயனையும் பெறுகின்றனர். ஒரு சிலர் மட்டுமே கடலினுள் சென்று முத்து, ரத்தினம் போன்ற விலையுயர்ந்த மதிக்கத்தக்கப் பொருள்களை வெளிக்கொணர்கின்றனர். அதேபோல் தலைவனின் செயல்களினால் பயன் பெறுபவர் பலர் இருந்தாலும், ஒரு சிலர் தலைவனுடன் நெருங்கிப் பழகி அவன் அறிவு அனுபவத்தைப் பெற்று மதிக்கத்தக்க வகையில் பெரும் தலைவனாக எதிர்காலத்தில் உருவாகின்றனர்.
  5. கடல் கடைந்து அமுதம் விஷம் தோன்றியது என்பது பாரத புராணக் கதைகள். அதேபோல் தலைவனின் செயல்கள் சிலருக்கு நன்மையாகவும், சிலருக்குத் தீமையாகவும் அமையும் என்பது நடைமுறை உண்மை. இங்கு ச
    தலைவன் செயல் தன்மை கொண்டவனாக இருக்க வேண்டும் என்பது இதன் மூலம் அறியப்படுகிறது. செயலின் மூலமே நன்மை தீமைகள் விளையும்.
  6. கடல் வழியே சென்று வணிகம் செய்து பொருளாதாரம் வளர்த்தனர். “திரை கடலோடியும் திரவியம் தேடு” என்பது பழமொழி. தலைவன் என்பவன் எட்டுத்திக்கும் சென்று பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். பெரு நிறுவனங்களை விரிவுபடுத்தி பொருளாதாரத்தைப் பெருக்க வேண்டும்.
  7. கடல் கலங்காது , கலங்கினாலும் நொடிப்பொழுதில் தெளிவுப் பெறும். இந்தத் தன்மை ஒவ்வொரு தலைவனுக்கும் இன்றியமையாத ஒன்றாக இருக்க வேண்டும். இது தலைமைப் பண்புகளில் மிக முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது.
  8. கடல் அலை என்றும் ஓயாது , உருவாகிக் கொண்டிருக்கும். கடல் எப்பொழுதும் கர்ஜித்துக் கொண்டிருக்கும். அதேபோல் தலைவனின் மனம் வாக்கு செயல் என்ற மூன்றும் ஓயாது செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

நம்மாழ்வார் திருவாய்மொழியில் “கடல்வண்ணா

கண்ணனே” என்னும் படியாகக் கண்ணபிரான் பகவத்கீதை என்ற உயர்ந்த சாஸ்திரத்தை வழங்கி , அதன் மூலம் பக்தியையும் நிர்வாகத் திறனையும் மக்களுக்கு வழங்கினான்.

” கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும், கடல்வண்ணா கடியை காண் என்னும்” என்பது நம்மாழ்வார் வாக்கு.

கடல்வண்ணன் போல் தலைவன் என்பவன் மக்களின் அன்பைப் பெற்று அவர்களுக்கு அரனாக இருத்தல் வேண்டும்.

2 COMMENTS

  1. அருமையான பதிவு திருநாமங்கள் காட்டும் தலைமை பண்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe