
ராஜராஜ சோழன் சதய விழா ஆளுநர் புகழாரம்; அண்ணாமலை மகிழ்ச்சி
மன்னன் ராஜராஜ சோழன் ஆட்சியில், தமிழகம் ஆழ்ந்த ஆன்மிக பண்பாட்டு எழுச்சி பெற்றது என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திறத்தில் பிறந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய
நட்சத்திரத்தில் வெகு விமர்சையாக சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு சதய விழா நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளுடன் துவங்கியது.
இதனை முன்னிட்டு கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பேரரசர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகள், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், நிர்வாகத்திறன் கியவற்றுக்கு அவர் எப்போதும் உத்வேகமாக இருப்பார்கள்.
மேலும், அவரது ஆட்சியில் ‘தமிழகம்’ ஆழ்ந்த ஆன்மீக பண்பாட்டு எழுச்சி பெற்றது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சதய விழாவை முன்னிட்டு அண்ணாமலை தனது முகநூலில் “சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசன், தேவாரம், திருவாசகப் பதிகங்களை மீட்டெடுத்த சிவபாத சேகரன், பெருவுடையார் கோவில் கட்டிய பெருமகன், குடவோலை முறை கொண்டு ஜனநாயக பாடம் எடுத்த முதல்வன் ராஜராஜ சோழனின் சதய விழாவில்
தமிழக பா.ஜ.க சார்பாக வணங்கி மகிழ்கிறோம்”. என்று மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில், மாமன்னன் ராஜராஜசோழனின் 1,037வது சதயவிழா நேற்று (02.11.2022) துவங்கியது. மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய
நட்சத்திரத்தில் பிறந்ததால், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தில், சதய விழாகொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ‘ராஜராஜ சோழனின் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும்’ என, தமிழக அரசு அறிவித்தது. இதனை வரவேற்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், ராஜராஜ சோழன் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக ஊடகத் தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் . அதன் விவரம் வருமாறு:
மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு பா.ஜ.க தமிழ்நாடு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அறிவிப்பு வந்த இந்த நன்னாளில், தமிழக அரசுக்கு தமிழக பா.ஜ.க சார்பாக ஒரு கோரிக்கையை தமிழக மக்களின் சார்பாக முன்வைக்கிறோம்.
அகில உலகம் போற்றும் தஞ்சை பெரியகோவில் கண்ட மாமன்னர் ராஜராஜ சோழனின் நினைவிடம் உடையாளூரில் உள்ளது.
பராமரிப்பின்றி சிதலமடைந்த நிலையில் இருக்கும் மாமன்னரின் நினைவிடத்தை
தமிழக அரசு புனரமைத்து அவ்விடத்தில் ஒரு மாபெரும் நினைவிடம் அமைத்திட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின்
செயல்படுத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்”. என்று கூறியிருந்தார்.