இந்தியா-மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையேயான
முதல் ஒருநாள் போட்டி – 22.07.2022
– கே.வி. பாலசுப்பிரமணியன்
இந்திய அணி (50 ஓவர்களில் 308/7, ஷிகர் தவான் 97, சுப்மன் கில் 64, ஷ்ரேயாஸ் ஐயர் 54, அல்சாரி ஜோசப் 2/61, மோடி 2/54) மேற்கு இந்திய அணியை (50 ஓவர்களில் 305/6 கைல் மேயர்ஸ் 75, ப்ரூக்ஸ் 46, ப்ரண்டன் கிங் 54, சிராஜ், ஷர்துல் தாகூர், சாஹல் தலா 3 விக்கட்)
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை மூத்த வீரர் ஷிகர் தவான் அணித்தலைவராக இருக்கிறார். துணைத்தலவராக ஜடேஜா செயல்பட இருக்கிறார். இந்தத் தொடரில் இருந்து ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான் சுப்மான் கில் தொடக்க வீரர்களாக களமறங்கினர். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 17.4 ஓவர்களில் 119 ரன்கள் சேர்த்தபோது அரைசதம் கடந்து விளையாடி வந்த சுப்மான் கில் ரன் அவுட்டாகி வெளியறேினார். தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் (54 ரன்) சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த கேப்டன் தவான், சதத்தை நோக்கி பயணித்தார்.
ஆனால் துரதிஷ்வசமாக 99 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 97 ரன்கள் எடுத்து 3 ரன்களில் சதத்தை தவறவிட்டார். அதன்பிறகு வந்த வீரர்கள் சிறப்பாக ஆடமுடியவில்லை. மே.இ தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்கள் 35 ஓவருக்குப் பிறகு சிறப்பாக பந்து வீசினர். அதனால் நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 309 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கிய நிலையில், தொடக்க வீரர்களாக ஷாய் ஹோப் மற்றும் கெயில் மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் சாய் ஹோப் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக மேயர்சுடன், சாமர் பூரூக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் நிதான ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் சீராக உயர்ந்தது.
இந்த ஜோடியில் பூருக்ஸ் 46 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் கெயில் மேயர்ஸ் 75 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் நிகோலஸ் பூரன் 25 ரன்களும், ரோவன் பவல் 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிராண்டன் கிங் 54 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
இறுதியில் தங்களது அதிரடியான ஆட்டத்தால் அணியின் ரன்ரேட்டை வேகமாக உயர்த்திய அகேல் ஹூசைன் 32 (32) ரன்களும், ரோமோரியோ செப்பர்டு 39 (25) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இருப்பினும் இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் தரப்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் மற்றும் சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன்படி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலை வகிக்கிறது.
இன்று (24.07.2022) இரண்டாவது ஒருநாள் போட்டி நடக்கவுள்ளது.