சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது, உடனடி முத்தலாக் உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியலில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது குறைகூறிய செல்லமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகள் பெயர் இல்லை.
அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைத்த ஆதார், சபரிமலை வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அறிவிப்பு; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, கன்வில்கர், சந்திரசூட், அசோக்பூஷன் ஆகியோர் அமர்வில் இடம்பெற்றுள்ளனர்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக கருத்து கூறிய 4 பேரும் அரசியல் சாசன அமர்வில் இடம்பெறவில்லை; அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் 13 முக்கிய வழக்குகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடமே உள்ளன.