26/11: மறக்க முடியாதவர்கள்! ஆனால்… இன்றைய இந்தியா மாறியிருக்கிறது..!

உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்
ombley - 2026

ஒவ்வொரு பாரதீயனும் குறிப்பாக ஒவ்வொரு ஹிந்துவும் தலைவணங்க வேண்டியவர் துக்காராம் ஒம்ப்ளே.

இவர் மும்பை போலீஸ் துறையில் அஸிஸ்டெண்ட் சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த போது 2008 ஆம் ஆண்டு மும்பையை பாகிஸ்தானிய தீவிரவாதிகள் தாக்கினர். அப்போது நமக்காக தன் உயிரைப் பணயம் வைத்து.. உடல் முழுவதும் குண்டுகளை ஏற்றுக் கொண்டு அஜ்மல் கஸாப் என்கிற லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதியை உயிரோடு பிடிக்க உதவினார்.

அப்படி இவர் அந்தத் தீவிரவாதியைப் பிடிக்க உதவியதால் மட்டுமே காங்கிரஸைச் சேர்ந்த சோனியாவும், அவளின் கொத்தடிமைகளான ப.சிதம்பரமும், திக்குவாய் சிங்கும் இந்த தீவிரவாத தாக்குதலை நிகழ்த்தியதே ஹிந்துக்கள் என்று உலக அளவில் ஹிந்துக்களை தீவிரவாதிகளாக ப்ராண்ட் செய்ய முயன்ற சதி வெளிவந்தது.

அந்த முறையில் இவரை வணங்க வேண்டியது நம் ஒவ்வொரு ஹிந்துக்கும் கடமையாகிறது..!

NEVER FORGET.. NEVER FORGIVE..!

  • எஸ்.பிரேமா
mumbai terror attack - 2026

26/11 … மும்பை ..பயங்கரவாத தாக்குதலில் சிக்கி…நூற்றுக்கணக்கான மனித உயிர்களை இழந்த நாள் . பல நூற்றுக்கணக்கான மனிதர்கள் படுகாயம் அடைந்த நாள்.

அப்போதிருந்த இந்தியாவிற்கும், இன்றைய இந்தியாவிற்குமான மாறுதல்..மக்களால் மிக தெளிவாக உணரக்கூடிய ஒன்று.

தன் மக்கள் மீது நிகழ்த்தப்படுகிற பயங்கரவாத செயல்களை வெறுமனே கடும் கண்டனங்களோடு முடித்துக் கொள்கிற பழைய இந்தியா இன்று இல்லை. பயங்கரவாதிகளும், பிரிவினைவாதிகளும் பெருமளவில் ஒடுக்கப் பட்டிருக்கும் இந்தியா…இன்றைய இந்தியா.

பயங்கரவாத மையப்புள்ளியாக விளங்கிய காஷ்மீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் இந்தியா.. இன்றைய இந்தியா. சுதந்திர இந்தியாவை அச்சுறுத்தி வந்த பல தீராத அரசியல்-மத-பூகோள பிரச்சினைகளில் இருந்து.. ஆறு வருடங்களில்…இந்தியா ..பெற்றிருக்கும் விடுதலையும், அடைந்திருக்கும் தீர்வுகளும் அசாத்தியமானவை!!

அரசியல் கூர்மை கொண்ட வலிமையான தலைமை இருந்தால் …இந்தியாவின் பலப்பல இடியாப்ப சிக்கல்கள் கூட தீர்க்கக் கூடியவையே என்று உணர்த்தி இருக்கிறது…மோடி அரசின் இந்த 6 வருடங்கள்.

  • பானு கோம்ஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.