Homeஉரத்த சிந்தனை‘மும்பை 26/11’: மறக்கவும் முடியாது! மன்னிக்கவும் முடியாது!

‘மும்பை 26/11’: மறக்கவும் முடியாது! மன்னிக்கவும் முடியாது!

mumbai terror attack - Dhinasari Tamil

26/11/2008: இன்று மும்பை தாக்குதல் தினம்! மறக்கமுடியாது! மன்னிக்கமுடியாது!

இந்த நாள் ஒரு கொடூரமான, பயங்கரமான நாளாகும். ஒவ்வொரு தேசபக்தி உள்ள இந்தியர்களாலும் மறக்கப்பட முடியாத நாள் இது. இந்த மூன்று நாட்கள் மும்பையை எதிரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதே நாளில் 2008 இல் மும்பையில்… 10 இஸ்லாமிய, பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் 166 க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொது மக்களை தயவு தாடசண்யமில்லாமல் கொன்று குவித்தனர். 10 வருடங்கள் ஆன போதிலும் இந்த அடாத செயலால் ஏற்பட்ட காயம் இன்னும் ஆறாத ரணமாக மக்களின் மனதில் அப்படியே இருக்கிறது. குறிப்பாக தன் சொந்தங்களை அகாரணமாக இழந்தவர்களை இந்த நாள் வெகுவாகவே பாதித்துள்ளது.

ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், மற்றும் வெள்ளையர்கள் மட்டுமே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாரிமன் பாயிண்ட், லியோ போல்ட் கேப், ஓபராய் மற்றும் தாஜ் ஹோட்டல் ஆகிய இடங்களில் கொன்று குவிக்கப்பட்டனர். இது தவிர CST ரயில்வே ஸ்டேஷனில் 58 பேரை கொலை செய்தனர். உலகத்திலேயே நடந்த கொடூரமான தாக்குதலாகவே இதைக் கூற வேண்டும்.

இதன் நடுவே அப்போது ஆண்ட நம் மத்திய UPA அரசு ஒன்று தன் உடைகளை அடிக்கடி மாற்றி மாற்றி அணிந்து தன்னை மலர்ச்சியாகக் காண்பித்துக் கொள்ளவும் (சிவ்ராஜ் படேல்) அல்லது தன் மஜா சகாக்களுடன் இரண்டு நாட்கள் பார்ட்டி செய்து கொண்டும் (ராகுல் காந்தி) அல்லது காங்கிரஸின் கழுதைப்படைத் தலைவரான திக்விஜய் சிங், “26/11 தாக்குதல் ஆர்.எஸ்.எஸ் மேற்கொண்டது,” என்று புரளி கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்த பாரதமே, அத்தனை ஹிந்துக்களும் ஒரே ஒரு அற்புதமான, வீரமான ஆத்மாவிற்குக் கடமைப் பட்டுள்ளது. ஆம்… அவர்தான் தன்னையே, தன் வாழ்க்கையையே தியாகம் செய்து உண்மையை உலகுக்கு உணர்த்தியவர். ஒருவேளை கான்ஸ்டபிள் துகாராம் ஓம்பலே தன்னையே பணயம் வைத்து இந்த “மொஹமத் ஆமீர் அஜ்மல் கஸாப்” ஐ உயிருடன் பிடிக்கவில்லை என்றால் அந்த நேரத்தில் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் 26/11 நடந்த இந்த கோரக் கொலைகள் அனைத்தையும் செய்தது காவித் தீவிரவாதம் என்று ஜட்ஜ்மெண்டே கொடுத்திருப்பார். ஒட்டு மொத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளும் விடுவிக்கப்பட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றி RSS/ஹிந்துக்களை பழி தீர்த்துக் கொண்டிருப்பார்.

இது மூலமாக நம் அனைவருடைய வணக்கத்திற்கும் சல்யூட்டுக்கும் உரியவர்களாக நாம் வாழ்நாள் முழுவதும் நினைவு கூற வேண்டியவர்கள் திரு.துகாராம் ஒம்பலே, மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணன், ஶ்ரீ விஜய் சலஸ்கார், ஶ்ரீ அசோக் கெம்டே, NSG கஜேந்திர சிங், சஷாங்க் ஷிண்டே, ஶ்ரீ கரம்பீர் காங்க், மற்றும் பல முகமறியாத பெயரரியாத வீரர்கள் யாரெல்லாம் தங்களைப் பணயமாக்கி நூற்றுக்கணக்கில் பொது மக்களின் உயிரைக் காக்கப் போராடிய தியாகிகள். அவர்களின் வீரமும், தைரியமும், தீர்மானத்துடன் எதிரிகளை எதிர் நோக்கும் திறனையும் ஒவ்வொரு பாரதீயர்களையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.

இதன் நடுவே… ’ராஷ்ட்ரிய சஹாரா” என்ற உருதுப் பத்திரிகையின் ஆசிரியர் அஜிஸ் பர்னி என்பவர் ஒரு புத்தகம் எழுதினார். தலைப்பு: 26/11 – ஆர்.எஸ்.எஸ்.கீ சாஜிஷ்? (26/11 – ஆர்.எஸ்.எஸ்.சதியா?)

மேற்படிப் புத்தகத்தை வெளியிட்டது யார் தெரியுமா? சாட்சாத் திக்விஜய் சிங்தான்! அந்தக் கூட்டத்தில் பேசிய இன்னொரு பிரபலம் யார் தெரியுமா? பிரபல இயக்குனர் மகேஷ் பட்! ஆம், நடிகை ஆலியா பட்-ன் அப்பாவேதான். அவருக்கும் 26/11-க்கும் என்ன தொடர்பு?

டேவிட் ஹெட்லீயின் மும்பை விஜயத்தின்போது அவன் ஏற்படுத்திக்கொண்ட பல தொடர்புகளில் மகேஷ் பட் மகன் ராகுல் பட் ஒருவராக இருந்தார். ஹெட்லியின் வாக்குமூலத்துக்குப் பிறகு தற்போது விசாரணை வளையத்தில் சிக்கி கடந்த ஜனவரி மாதம் கூட ஆஜர் ஆகியிருக்கிறார். இப்போது புரிந்ததா மகேஷ் பட் அந்தப் புத்தக வெளியீட்டுக்கு எதற்கு வந்தார் என்று?

26/11-ஆர்.எஸ்.எஸ். சதியா? புத்தகத்தில்… பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்-ம் சேர்ந்து 26/11 தாக்குதலுக்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டார்கள் என்று அடித்துக் கூறியிருந்தார். இது ஒரு தனி கதை.

அஜ்மல் கஸாப் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதே பாகிஸ்தானின் திட்டமாக இருந்திருக்கிறது. ஆனால், ஹவல்தார் ஓம்ப்ளேயின் சாகசத்தால் அவன் பிடிபட்டான்; குட்டு உடைபட்டது. வயர்லெஸ் சம்பாஷணைகள் கிடைத்தன; வாக்குமூலம் கிடைத்தது. அவன் பாகிஸ்தானி என்பதற்கான நிரூபணமும் கிடைத்தது. போதாக்குறைக்கு டேவிட் ஹெட்லியை அமெரிக்காவில் பிடித்ததும் மொத்தத் திட்டமும் வெளிவந்தது.

தங்கள் இன்னுயிரை நீத்த இந்த வீரர்களுக்காகவும், எதற்காக இறந்தோம் என்று கூடத் தெரியாமல் தாய் தந்தையர்களையும், மனைவி மக்களையும் விட்டு இறந்து போன அந்த 166 பேர்களின் ஆன்மாக்களையும் இந்த நாளில் நாம் நினைவு கூறுவோம். இதே நாளில் ஏதோ ஒன்றை செய்து இந்த கொடூரமான நாளில் அவதியுற்ற மக்களுக்காக சரீரத்தாலும் மனதாலும் சேவை செய்த ஒவ்வொருவருக்கும் நன்றி கூறுவோம்.

வீரவணக்கம் ! வந்தேமாதரம்! பாரத் மாதா கி ஜே..! ஜெய்ஹிந்த்..!

  • அர்ஜுன் சம்பத் (தலைவர், இந்து மக்கள் கட்சி)

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
66FollowersFollow
74FollowersFollow
2,821FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...