அச்சச்சோ… பாதிக்குப் பாதிதான் பெய்துள்ளது வடகிழக்குப் பருவமழை!

Published:

rain 1 - 2026

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை 50 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவை விட 46 சதவீதம் அதிகமாக பெய்ததாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் வடகிழக்கு பருவமழை மிகவும் குறைவாகவே பெய்துள்ளது என்றும், நடப்பு மாதத்தில் இன்று வரை சராசரியாக 16 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும் என்றும் 8 செ.மீ. மட்டுமே பெய்துள்ளது என்றும், இது 50 சதவீதம் குறைவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் நடப்பு மாதத்தில் சராசரியாக 30 செ.மீ. மழை பெய்ய வேண்டும் என்றும் 8 செ.மீ. மட்டுமே பெய்துள்ளது என்றும், இது 74 சதவீதம் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img