நேற்று அய்யோ அம்மா நெஞ்சுவலி நாடகம்! இன்று ஜாமீன் நிபந்தனை ‘சோலி’ய முடிச்ச நீதிபதி ‘நசீர் அகமது’!

உள்ளூர் செய்திகள் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்
nellai kannan speech - 2026

மோடி சோலியை முடிக்கச் சொன்ன நெல்லை கண்ணனின் ஜாமீனுக்கான நிபந்தனை சோலியை முடித்து வைத்தார் நீதிபதி நசீர் அகமது!

நெல்லை கண்ணனுக்கு தினமும் இரண்டு முறை மேலப்பாளையம் காவல்நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று விதிக்கப்பட்ட நிபந்தனையை ரத்து செய்து முதன்மை மாவட்ட நீதிபதி நசீர் அகமது உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக, நெல்லை கண்ணனுக்கு தொடர் நெஞ்சு வலி, இருமல் இருப்பதாகக் கூறி, நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அப்போதே, ஜாமீன் நிபந்தனை தளர்த்த அடுத்த நாடகமா ? என்று பலரும் கேள்வி எழுப்பினர். அதனை இன்று உறுதிப் படுத்தி நீதிமன்றம் அவரது ஜாமீன் நிபந்தனைகளை முழுவதுமாக ரத்து செய்துள்ளது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சோலியை முடித்து விடுவீர்கள் என்று பார்த்தேன் ஆனால் இன்னும் முடிக்காம வெச்சிருக்கீங்களே என்று, இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கத்தினரின் ‘குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்பு’க் கூட்டத்தில் பேசினார் நெல்லை கண்ணன்.

இதை அடுத்து அவர் மீது புகார்கள் கூறப் பட்டன. அவர் மீது வழக்கும் பதிவு செய்யப் பட்டது. இந்நிலையில் அவர் கைதாவதைத் தவிர்க்க இசுலாமிய அமைப்பு ஒன்றின் ஆம்புலன்ஸில் நெல்லையில் இருந்து மதுரைக்கும் பின்னர் பெரம்பலூருக்கும் சென்று ஒரு விடுதியில் தங்கியிருந்தார். ஆனால், தொடர்ந்து வந்த நெருக்கடிகளின் காரணமாக அவர் கைது செய்யப் பட்டார்.

பின்னர் நெல்லை கண்ணன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனுவுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் அளித்தார் நீதிபதி நசீர் அகமது. இந்நிலையில், நேற்று மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்வதாகக் கூறிய நிலையில், இன்று அவருக்கான நிபந்தனைகளையும் ரத்து செய்துவிட்டார் நீதிபதி நசீர் அகமது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.