சிவகாசி அருகே பட்டாசு ஏஜென்டிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.10 லட்சம் மோசடி செய்த 4பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி ராமச்சந்திரா புரத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் (வயது45) பட்டாசு ஏஜென்ட்டாக உள்ளார். இவரிடம் தாயில்பட்டி கோட்டையூரைச் சேர்ந்த கருப்பசாமி (55) சாத்தூர் அருகே இருக்கன்குடியைச் சேர்ந்த ரமேஷ் ( 38 ) சாத்தூர் அருகே வேப்பிலைபட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் ( 40 )கார் டிரைவர் சாத்தூர் அருகே இராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் (47) ஆகியோர் கடந்த 6 ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ.10 லட்சம் வாங்கியுள்ளனர் .
கடந்த மூன்று நாட்களாக கூடுதலாக 10 லட்சம் கேட்டு சௌந்தரராஜனை மிரட்டி வந்துள்ளனர்.
இது குறித்து சிவகாசி டிஎஸ்பி அலுவலகத்தில் சௌந்தரராஜன் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கருப்பசாமி தாயில்பட்டி கோட்டையூர் கிளை திமுக., பிரதிநிதியாகவும், ரமேஷ் சாத்தூர் திமுக., இளைஞரணி நிர்வாகியாகவும் உள்ளனர்.