பேசுவதை நிறுத்தியதால் காதலியின் மூச்சை நிறுத்திய காதலன்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் கோவை
rathish

கோவை பேரூர் செட்டிபாளையம் அடுத்த ஆறுமுக கவுண்டனூர் எம்.ஆர். கார்டன் வீதியை சேர்ந்தவர் ரதீஷ் 22; மோட்டார் நிறுவன ஊழியர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஐஸ்வர்யா,18, என்பவரும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

திடீரென ஐஸ்வர்யா ரதீசுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்ற ரதீஷ் தன்னிடம் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐஸ்வர்யாவின் வயிற்றில் குத்தினார்.

மகளின் அலறல் கேட்டு வந்த தந்தை சக்திவேலையும் குத்தியுள்ளார். இருவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து ரதீசை பிடித்தனர். சட்டை சுழற்றிவிட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப் அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஐஸ்வர்யா இன்று காலை,11:00 மணியளவில் இறந்தார். தந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காதலிக்க மறுத்த பெண்ணை வாலிபர் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.