பெரியாழ்வாரின் வாரிசு வேதபிரான் பட்டர் அனந்தராம கிருஷ்ணன் வைகுண்ட பிராப்தி!

சற்றுமுன் தமிழகம்
srivilliputhur-azvar-varisu

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் வாரிசு வேதபிரான் பட்டர் அனந்தராம கிருஷ்ணன் வைகுண்ட பிராப்தி அடைந்தார்.

12 ஆழ்வார்களில் பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவர்கள். பெரியாழ்வாரின் வாரிசுகள் இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து வருகின்றனர்.

vedapiram-pattar-srivi
vedapiram-pattar-srivi

225 வது வாரிசு வேதபட்டர் அனந்தராம கிருஷ்ணன் ஆண்டாள் கோவில் சன்னதி தெருவில் வசித்து வந்தார். ஆண்டாள் வாழ்ந்த இடமாகக் கருதப்படும் இவரது இல்லத்திற்கு ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் சுவாமிகள் வருடத்திற்கு ஒருமுறை பச்சை பரத்தல் உற்சவத்தின்போது வந்து செல்வர்.

பெரியாழ்வாரின் 125வது வாரிசான வேத பிரான் பட்டர் அனந்த ராமகிருஷ்ணன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த நிலையில் இன்று வைகுண்ட பிராப்தி அடைந்தார். அவரது உடலுக்கு வைஷ்ணவ பெரியவர்கள், பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.