தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

Published:

railway news - 2026
#image_title

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக (Commissioning) மேற்கொள்ளப்படும் ‘பாதை அடைப்பு’ (Line Block) காரணமாக, திருநெல்வேலி ரயில் இருந்து புறப்பட்டு செல்லும் பிலாஸ்பூர் ஜாம்நகர் இரு ரயில்கள் செங்கோட்டை புனலூர் வழியாக சிலரயில்கள் பின்வரும் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

ரயில் எண் 16729 மதுரை சந்திப்பு – புனலூர் விரைவு ரயில்: 28.03.2026 மற்றும் 29.03.2026 ஆகிய தேதிகளில் புறப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண் 16730 புனலூர் – மதுரை சந்திப்பு விரைவு ரயில்: 29.03.2026 மற்றும் 30.03.2026 ஆகிய தேதிகளில் புறப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண் 56705 புனலூர் – கன்னியாகுமரி பயணிகள் ரயில்: 29.03.2026 மற்றும் 30.03.2026 ஆகிய தேதிகளில் புறப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண் 56706 கன்னியாகுமரி – புனலூர் பயணிகள் ரயில்: 29.03.2026 மற்றும் 30.03.2026 ஆகிய தேதிகளில் புறப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

சில ரயில் சேவைகள் பகுதி ரத்து செய்யப்பட்டது.

ரயில் எண் 22627 திருச்சி சந்திப்பு – திருவனந்தபுரம் சென்ட்ரல் இன்டர்சிட்டி விரைவு ரயில்: 30.03.2026 அன்று புறப்படும் இந்த ரயில் சேவை, திருநெல்வேலி சந்திப்பு மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையங்களுக்கு இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
ரயில் எண் 22628 திருவனந்தபுரம் சென்ட்ரல் – திருச்சி சந்திப்பு இன்டர்சிட்டி விரைவு ரயில்: 30.03.2026 அன்று புறப்படும் இந்த ரயில் சேவை, திருவனந்தபுரம் சென்ட்ரல் மற்றும் திருநெல்வேலி சந்திப்பு நிலையங்களுக்கு இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

  1. ரயில் எண் 22620 திருநெல்வேலி சந்திப்பு – பிலாஸ்பூர் சந்திப்பு விரைவு ரயில்: 29.03.2026 அன்று புறப்படும் இந்த ரயில் சேவை, தென்காசி, செங்கோட்டை, புனலூர் மற்றும் கொல்லம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் சேவை, நாகர்கோவில் டவுன் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையங்களில் நின்று செல்லாது (நிறுத்தங்கள் தவிர்க்கப்படும்). இந்த ரயில் சேவைக்கு தென்காசி, செங்கோட்டை, புனலூர் ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தங்கள் இருக்கும்.
  2. 30.03.2026 அன்று தொடங்கும் ரயில் எண். 19577 திருநெல்வேலி – ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் பயணம் தென்காசி, செங்கோட்டை, புனலூர் மற்றும் கொல்லம் வழியாக திருப்பி விடப்படும்.
    இந்த ரயில் சேவை வள்ளியூர், நாகர்கோவில் டவுன், பாறசாலை, திருவனந்தபுரம் சென்ட்ரல் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும். இந்த ரயிலுக்கு தென்காசி, செங்கோட்டை, புனலூர் ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தங்கள் இருக்கும்.
ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

முழு ரத்து
28.03.2026 அன்று முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்(1 நாள்)

  1. ரயில் எண். 16729 மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ்
    2026 மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன (2 நாட்கள்)
  2. ரயில் எண். 56305 நாகர்கோவில் – திருவனந்தபுரம் வடக்கு பயணிகள்
  3. ரயில் எண். 56310 திருவனந்தபுரம் வடக்கு – நாகர்கோவில் பயணிகள்
  4. ரயில் எண். 56306 திருவனந்தபுரம் வடக்கு – நாகர்கோவில் பயணிகள்
  5. ரயில் எண். 56309 நாகர்கோவில் – திருவனந்தபுரம் வடக்கு பயணிகள்
  6. ரயில் எண். 56705 புனலூர் – கன்னியாகுமரி பயணிகள்
  7. ரயில் எண். 56706 கன்னியாகுமரி – புனலூர் பயணிகள்
  8. ரயில் எண். 66306 கொல்லம் – கன்னியாகுமரி மெமு
  9. ரயில் எண். 66305 கன்னியாகுமரி – கொல்லம் மெமு
  10. ரயில் எண். 16730 புனலூர் – மதுரை எக்ஸ்பிரஸ்
  11. ரயில் எண். 56101 நாகர்கோவில் – கொல்லம் பயணிகள்
  12. ரயில் எண். 56102 கொல்லம் – நாகர்கோவில் பயணிகள் ரயில் ஆகும்.
ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img