தென்காசி மாவட்டத்தில் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத் தொடக்கம்!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
abgp-tenkasi
abgp-tenkasi

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் கிளை அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத் (ABGP) எனப்படும், அகில இந்திய நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் இன்று 08.11.2020 காலை 11 மணிக்கு பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கிளை பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார் மற்றும் நுகர்வோர் செயல்பாடுகள் குறித்து மாவட்ட இணை பொறுப்பாளர்கிருஷ்ணன், வழக்கறிஞர்கள் மற்றும் சமுக ஆர்வலர் பாரதி முருகன், வழக்கறிஞர் குமரன் சென்னை உயர்நீதிமன்றம். ராஜேஷ் குமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

abgp
abgp

இதில், அதிக அளவில் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டது. மேலும், நுகர்வோர் பற்றிய ஆலோசனை வழங்கப்பட்டது .

தென்காசி மாவட்டத்தில் ABGP யின் முதல் கிளை இதுவே ஆகும். நிகழ்ச்சியை ஆசிரியர் செந்தமிழ் அரசு தொகுத்து வழங்கினார். முடிவில் மாரியப்பன் நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.