December 8, 2024, 2:03 AM
26.8 C
Chennai

அதிர்ச்சி! நெல்லை பல்கலை.,யில்… நக்சல்களைப் போற்றும் பாடம்! ஏபிவிபி புகார்!

abvp-petition
<strong>ஏபிவிபி மாணவர் அமைப்பினர் அதன் தென் தமிழக மாநில இணைச் செயலாளர் சிவிக்னேஷ் தலைமையில் சென்று பல்கலை துணைவேந்தரிடம் புகார் மனு அளித்த போது<strong>

நக்சல் சிந்தனைகளைப் பரப்பும் பாடத்தை மாணவர்களுக்கு வைத்து, மாணவர்களை தேச விரோத சிந்தனையில் வளர்த்தெடுக்கும் முயற்சியில் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஈடுபட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் மாவோயிஸ்ட் நக்சல்களின் வாழ்க்கை, போராட்டம், ஆயுதக் கலாசாரம், கொலைக் களன், ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆயுதப் போராட்டம், காடுகளில் மறைந்து வாழும் வாழ்க்கை, போலீஸாரைக் கொன்ற் குவிக்கும் உத்திகள் என பல்வேறு தகவல்களை நேரடியாகப் பேட்டி கண்டு, நக்சல்களை உயர்வாகச் சித்திரிக்கும் வகையில் இடதுசாரி எழுத்தாளர் அருந்ததிராய் எழுதியுள்ள “Walking with the Comrades” புத்தகத்தை நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், ஆங்கில இலக்கிய முதுநிலை மூன்றாம் பருவத்தின் பாடத்திட்டத்தில் இணைத்துள்ளார்கள்.

இது எவர் மூலம் நடந்தது, பல்கலை சிலபஸில் இந்தப் பாடம் இடம் பெற்றது எப்படி? இதனை எவர் மூலம் இணைத்தார்கள் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர்.

ALSO READ:  சிவகங்கை: ரிசர்வ் வங்கி 90வது ஆண்டு விநாடி வினா போட்டி அறிவிப்பு!

தற்போது இது நெல்லை பல்கலையில் ஒரு பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதை அடுத்து, இது குறித்த புகார் மனுவை ஏபிவிபி அமைப்பினர் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணியிடம் அளித்துள்ளனர். புகாரைப் பெற்றுக் கொண்ட அவர், இந்தப் பாடத்தை பாடத் திட்டத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாக மாணவர்களிடம் உறுதி கூறியுள்ளதாகத் தெரிகிறது.

ஏபிவிபி மாணவர் அமைப்பினர் ஏபிவிபி தென் தமிழக மாநில இணைச் செயலாளர் சி.விக்னேஷ் தலைமையில் சென்று, பல்கலை., துணைவேந்தரிடம் அளித்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது…

வணக்கம். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க பல்கலைக்கழகமாகும். எண்ணற்ற ஆன்றோர்களும் சான்றோர்களும் கல்வி பயின்ற பல்கலைக்கழகம். இதில் முதுகலை ஆங்கிலம் 3 வது பருவத்தின் Common wealth இலக்கியத்தில் 5 வது Unit இல் அருந்ததி ராய் அவர்களால் எழுதப்பட்ட புத்தகம் “Walking with the Comrades “. இது தேச விரோத மாவோயிஸ்டுகளின் ஆயுத கலவரங்களையும், கொலைக்கலகங்களையும் வெளிப்படையாக ஆதரிக்கக்கூடிய புத்தகம்.

ALSO READ:  சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ எடுத்த விவகாரம்: போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த புத்தகம் பல்கலைக் கழகப்பாடத்திட்டத்தில் உள்ளது என்கிற செய்தி வருத்தமளிக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் மீது நேரடியாக நக்சல் மற்றும் மாவோயிச கருத்துக்கள் கடந்த 3 ஆண்டுகளாக திணிக்கப்பட்டு வந்துள்ளது.

ஆசிரியர்களும் தேச விரோத கருத்துக்களை பாடமாக நடத்தி வந்துள்ளனர். படிக்கும் மாணவர்களுக்கு நமது நாட்டின் மீது வெறுப்புணர்வை தூண்டக்கூடிய வகையில் இந்த புத்தகம் அமைந்துள்ளதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

நமது லட்சக்கணக்கான தேசபக்த இராணுவ வீரர்களை கொன்றுகுவித்த நக்சல்வாத சிந்தனைகளின் கூடாரமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாற ABVP ஒருபோதும் அனுமதிக்காது.

தேச விரோத கருத்துக்களை பரப்பக் கூடிய இந்த புத்தகத்தை பாடத்திட்டமாக சேர்த்த பல்கலைக்கழக நிர்வாகத்தை ABVP தேசிய மாணவர் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. சர்ச்சைக்குரிய புத்தகம் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் மேலும் பாடத்திட்டத்திலிருந்து உடனடியாக அவை நீக்கப்பட வேண்டும் எனவும் ABVP வலியுறுத்துகிறது.

இதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் ABVP தேசிய மாணவர் அமைப்பு இதை மத்திய கல்வித் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா!
author avatar
Dhinasari Reporter

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week