ஓடும் ரயிலில் தவறி விழுந்த நபர்! பாய்ந்து காப்பாற்றிய போலீஸ்!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்
kovai 1 - 2026

ரயில் தண்டவாளத்தில் சிக்கிய நபரை போலீஸ் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் கோவையில் நடந்தேறியுள்ளது.

கோவை ரயில் நிலையத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் ரயிலானது நேற்று மாலை 4.30 மணிக்கு 3வது பிளாட்பார்முக்கு வந்துள்ளது. அப்போது ரயில் கிளம்பிய நிலையில் அங்கு வந்த பயணி ஒருவர், ஒடும் ரயிலில் ஏற முயற்சி செய்துள்ளார்.

கால் தவறி விழுந்து வண்டியின் கம்பியை பிடித்துக்கொண்டே சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு பணியில் இருந்த காவலர் சிரிஜித் பயணியை கண்ணிமைக்கும் நொடியில் காப்பாற்றினார். இதற்கான வீடியோவை ரயில்வே துறை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

kovai railway station - 2026

கோவை இரயில் நிலையத்தில் ஒடும் வண்டியில் ஏற முயற்சித்த பயணி தவறி கீழே விழுந்தார், வண்டியின் சக்கரத்தில் சிக்காமல் பாதுகாப்பு பணியில் இருந்து இரயில்வே போலிசார் பாதுகாப்பாக மீட்டார்.

ஆபத்தில் சிக்கிய நபரை தனது உயிரையும் பொருட்படுத்தாது புத்திசாலித்தனமாக மீட்ட ஆர்பிஎப் போலீஸ் சிரிஜித்தை ரயில்வே உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.