நிர்வாண பூஜை செய்தால் பணம் கொட்டும்! இளம் பெண்ணை ஏமாற்றிய கும்பல் கைது!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
puja - 2026

மகாராஷ்டிராவின் நாக்பூரில் வசிக்கும் விக்கி கணேஷ் கப்ரே (20), தினேஷ் மகாதேவ் நிகரே (25), ராமகிருஷ்ணா தாதாஜி மஸ்கர் (41), வினோத் ஜெயராம் மஸ்ரம் (42), சோபன் ஹரிபாவ் கும்ரே (35)
ஆகியோர் அதே பகுதியில் வசிக்கும் ஓர் டீனேஜ் பெண்ணிடம் குறுக்கு வழியில் கோடீஸ்வரியாக ஒரு வழி சொல்வதாக ஆசை காமித்தார்கள்.

அந்த ஐவரும் அந்த பெண்ணுக்கு அறிமுகமானவர்கள் என்பதால் அந்த பெண் அவர்கள் சொன்ன யோசனையை கேட்டார் .அப்போது அவர்கள் அந்த பெண்ணிடம் அவர் துணியே இல்லாமல் நிர்வாண பூஜை செய்தால் வானத்திலிருந்து 50 கோடி ரூபாய் பண மழையாக கொட்டுமென்று கூறினார்கள். ஆனால் அந்த பெண் துணியே இல்லாமல் இருக்க விருப்பமில்லாததால் அவர்களின் பூஜையை வேண்டாமென்று கூறினார்.

ஆனால் அந்த ஐவரும் அந்த பெண்ணை விடாமல் துரத்தி அவருக்கு பண ஆசை காமித்து அவரை நிர்வாண பூஜைக்கு வற்புறுத்தினார்கள்.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

இதனால் அந்த பெண் அவர்கள் மீது கடுமையான கோபமுற்றார். அதனால் அவர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் அங்குள்ள காவல் நிலையத்தில் அவர்கள் மீது புகார் கூறினார்.

அதன் பிறகு போலீசார் அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் அந்த விக்கி கணேஷ் கப்ரே (20), தினேஷ் மகாதேவ் நிகரே (25), ராமகிருஷ்ணா தாதாஜி மஸ்கர் (41), வினோத் ஜெயராம் மஸ்ரம் (42), சோபன் ஹரிபாவ் கும்ரே (35)ஆகியோர் மீது ப்ளாக் மேஜிக் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்தார்கள். பின்னர் அவர்களை கைது செய்து சிறையிலடைத்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.