கபாலியைப் போல்… பிரச்னை! தர்பார் படத்துக்கும்!

சற்றுமுன் சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
darbar - 2026

கபாலி பட வெளியீட்டின் போது சந்தித்த பிரச்னையை இப்போது தர்பார் படமும் சந்தித்து வருவதாகக் கூறப் படுகிறது.

தர்பார் பட விவகாரத்தில் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தர்பார் பட டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்க சொல்வதால் இழுபறி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் 75% தியேட்டர் உரிமையாளர்கள் தர்பார் படத்தை இன்னும் வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

டிக்கெட் விலையில் அதிகளவில் விநியோகஸ்தர்கள் பங்கு கேட்பதால் இழுபறி நீடித்து வருகிறது என்றும், கபாலி பட வெளியீட்டின் போதும் இதே போன்று பிரச்னை உருவானது என்றும் திரையுலகில் கூறப் படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் வரும் 9ஆம் திரைக்கு வருகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.