வேண்டும் வேண்டும் என கேட்கத் தூண்டும் பூண்டு சாதம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Garlic rice - 2026

பூண்டு சாதம்
தேவையான பொருட்கள்:

பூண்டு – 20 பல் (லேசாக தட்டியது)
பாசுமதி அரிசி – 2 கப்
பச்சை மிளகாய் – 4 (நீளமாக கீறியது)
வரமிளகாய் – 3
மல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
சோம்பு – 1/2 டீஸ்பூன்
முந்திரி – 10
வேர்க்கடலை – 10
எண்ணெய்/நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாஸ்மதி அரிசியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, கழுவ வேண்டும். பின் மிக்ஸியில் வரமிளகாய், சீரகம் மற்றும் மல்லி போன்றவற்றை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல், நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்/நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் வேர்க்கடலை போட்டு ஒரு நிமிடம் வறுத்து, அதனை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து விட வேண்டும்.

பிறகு அதில் சோம்பு, பிரியாணி இலை மற்றும் பச்சை மிளகாய் போட்டு சிறிது நேரம் வதக்கி, பின்பு அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை போட்டு, 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் தட்டி வைத்துள்ள பூண்டைப் போட்டு, சிறிது நேரம் வதக்கி, கழுவி வைத்திருக்கும் அரிசியைப் போட்டு கலந்து, 2 நிமிடம் வதக்கி, 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பை சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான பூண்டு சாதம் ரெடி!!! இதன் மேல் வறுத்த முந்திரி மற்றும் வேர்க்கடலை போட்டு அலங்கரித்து, பரிமாற வேண்டும். வேண்டுமெனில் இதனை குழம்பு அல்லது கிரேவியுடன் சாப்பிடலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.