வேகமெடுக்கும் அதிவேக ரயில்கள்! நவீனத்துக்கு மாறிய இந்தியன் ரயில்வே!

Published:

speed trains - 2026
  • இனி புதிய ஏசி த்ரீ டயர் எகானமி கோச்கள் இப்படி இருக்கும்…
  • ஹைதராபாத்திலிருந்து விஜயவாடாவுக்கு 3 மணி நேரத்திற்குள்ளே சென்று சேர முடியும்.
  • இந்தியன் ரயில்வே வேகத்தை அதிகரித்துள்ளது.

புதிதாக விரைவு ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கு முயற்சிகள் தொடங்கி விட்டன.

இந்தியன் ரயில்வே இதற்காக புதிய ஏசி த்ரீ டயர் எல்ஹெச்பி கோச் விரைவு ரயில் ட்ரயல்களை வெற்றிகரமாக நடத்தியது. புதிய கோச் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தோடு ஓடும்.

மேற்கு மத்திய ரயில்வே டபிள்யூசிஆர் சீனியர் ரயில்வே அதிகாரி வெளியிட்ட விவரங்களின்படி… கோச் பலவித புது அம்சங்களோடு யூரோபியன் தரத்திற்கு ஏற்ப இருப்பதற்கான பரிசோதனை களுக்கான டிரையல்கள் நடந்து முடிந்தன.

நாக்டா-கோட்டா-சவாயி மாதோபூர் பிரிவில் இந்தியன் ரயில்வே 60 க்கு மேலாக பலவித கோச்களையும் லோகோமோடிவ் களையும் ஓட்டி வேக சோதனை ஓட்டத்தை நடத்தியது. இதன் மொத்த நீளம் 350 கிலோ மீட்டர். இதுவரை இந்தப் பிரிவில் 8900 கிலோ மீட்டர் விரைவு ரயில்வே லைன் ஏற்பாடு செய்துள்ளோம் என்று ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.

பாரத் ரயில்வே இதுவரையிலேயே நாக்தா கோட்டா சவாயி மாதோபூர் பிரிவில் 180 கிலோமீட்டர் வேகத்தோடு ஏர்கண்டிஷன் த்ரீ டயர் எகானமி கிளாஸ் கோச் தொடர்புடைய வெற்றிகரமான பிரயோகங்களை நடத்தி முடித்தது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

இந்த பரிசோதனைகளில் கோச்களின் ஸ்பீடோமீட்டர் 180 கிலோ மீட்டர் மார்க்கைத் தொட்டதாகவும் அதேபோல் ரயில்கள் மின்னல் வேகத்தில் பல மார்க்குகளை தாண்டி உள்ளதாகவும் தெளிவாகத் தெரியக்கூடிய் வீடியோக்களை இந்தியன் ரயில்வே பகிர்ந்துள்ளது.

வரப்போகும் இரண்டு ஆண்டுகளில் மும்பை டெல்லி மார்க்கத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தோடு ரயில்களை நடத்துவதற்கு பாரதிய ரயில்வே யோசித்து வருகிறது. நாக்டா கோட்டா சவாயி மாதோபூர் இந்த மார்க்கத்தில் வருகிறது.
தற்போது இந்த மாதத்தில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் ஓடி வருகின்றன.

இனி புதிய ஏசி த்ரீ டயர் எகானமி கோச்கள் இப்படி இருக்கும்…

1.புதிய வடிவமைப்பில் ஒவ்வொரு பர்த்துக்கும் தனிப்பட்ட ஏசி குழாய் அளிக்கப்படும்.

2.கோச் சீட்டுகள், பர்த்கள் மேன்மையான மாடூலர் டிசைன் உள்ளதாக இருக்கும். சிற்றுண்டிகள் வைத்துக் கொள்வதற்கு ஏற்ப சிறிய டேபிள் களும் வாட்டர் பாட்டில் மேகஸின் போன்றவற்றை வைப்பதற்காக ஏற்பாடுகளும் இருக்கும்.

3.தகுதிவாய்ந்த சாக்கெட்களோடு கூட ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரீடிங் லைட்டுகள் மொபைல் சார்ஜிங் பாயிண்ட்கள் இதில் ஏற்பாடு செய்யப்படும்.

ALSO READ:  திமாகி நக்சல்கள் - யார் என்று சொல்லவும் வேண்டுமோ?

4. கோச்சுகள் விசாலமான கதவுகளோடு மாற்றுத் திறனாளி பிரயாணிகளுக்கு சௌகரியமாக இருக்கும்.

5. கோச்களில் அதிகப்படி பர்த்கள் அளித்துள்ளனர். புதிய கோச்சில் படுக்கைகளின் எண்ணிக்கை 72 லிருந்து 83 ஆக அதிகப் படுத்தியுள்ளார்கள்.

தற்போது மற்றும் வரும் நிதியாண்டுகளில் இப்படிப்பட்ட 248 பெட்டிகளை தயார் செய்ய வேண்டும் என்று ஆர்ஸிஎஃப் யோசித்து வருகிறது.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img