கொரோனா பேரிடர்க் கால சேவகர்களுக்கு கடையநல்லூர் எம்எல்ஏ., பாராட்டு!

நெல்லை
covid workers greeted by kadayanallur mla - 2026
நற்சான்றிதழ்களை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா வழங்கி பாராட்டினார்.

ஜனசேவா பொதுசேவை அமைப்பு சார்பில் கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்குச் செய்த பொதுசேவை , நதிகள் தூய்மைப்பணி, இரத்ததானம் போன்ற செயல்களுக்காக அவர்களைப் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா இல்லத்தில் வைத்து நடைபெற்றது.

ஜனசேவா அமைப்பின் முதன்மை சேவகர் சு.நாணய கணேசன், கே.முருகன்.N.S.S. அலுவலர். சித்த மருத்துவ உதவி அதிகாரி டாக்டர் அ.கலா, டாக்டர் R.கிருஷ்ணகுமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் எக்ஸ்னோரா அமைப்பு தலைவி டாக்டர். விஜய லெட்சுமி,சமூக சேவகர்கள் செங்கோட்டை ஹீலர் ரா.ஆறுமுகம், குருவாயூர் கண்ணன், குமார், க.செண்பகராஜன், குமார்,ஜெகதீஸ், பிரவீன்குமார், வல்லம் இ.ஆதிசங்கர், இ.குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜனசேவா முதன்மை சேவகன் சு.நாணய கணேசன் மற்றும் செங்கோட்டை JCI பொதிகை தலைவர் R.இராமசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.