புதிதாக தேர்வான எஸ்ஐ.,களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய தென்காசி எஸ்பி.,!

சற்றுமுன்
tenkasi sp krishnaraj - 2026

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நேரடி காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பெண்கள் உட்பட 49 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பணி நியமன ஆணையை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஐபிஎஸ்., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து அனைவருக்கும் தனது வாழ்த்துகளைக் கூறி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடி உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு காவல்துறை பணியில் நேர்மையுடனும், பொறுப்புடனும் தனது பணியினை திறம்படச் செய்ய வேண்டும் என்று தனது வாழ்த்துகளையும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.