mohalai panneer masala - 2026

முகலாய் பன்னீர் கிரேவி

தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
மிளகாய் – 3-4
முந்திரி – 10-12
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
சாஹி சீரகம் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
பன்னீர் – 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது) தயிர் – 1/2 கப்
உலர்ந்த வெந்தய கீரை – 1 டேபிள் ஸ்பூன்
க்ரீம் – 1/2 கப்
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் முந்திரியைப் போட்டு, ஒரு கப் நீரை ஊற்றி, வெங்காயம் நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பின்னர் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சாஹி சீரகம் சேர்த்து தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். பிறகு அதில் உப்பு, சர்க்கரை மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட்டு, குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் தயிரை ஊற்றி கிளறி, பன்னீர் துண்டுகளை சேர்த்து பிரட்டி விட வேண்டும். இறுதியாக அதில் உலர்ந்த வெந்தயக் கீரையை கையால் நசுக்கிப் போட்டு, க்ரீம் சேர்த்து கிளறி இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், முகலாய் பன்னீர் கிரேவி தயார்.

ALSO READ:  திமாகி நக்சல்கள் – யார் என்று சொல்லவும் வேண்டுமோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending