பக்கவாதத்தை நீக்கும் பக்கா மூலிகை தழுதாழை!

Published:

thazhuthali - 2026

தழுதாழை மூலிகை – மருத்துவ பயன்கள்

வெப்ப மண்டலக் காடுகளில் சிறு மரம்போல வளர்வது தழுதாழை. இதன் இலையும் வேரும் பல மருத்துவக் குணங்கள் கொண்டவை. மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்களைத் தேற்றுவதற்கு இந்தக் கீரைப் பயன்படுகிறது.

தழுதாழை செடி, காடுகளில் வளர்வது, புதர்செடி அமைப்பிலும் காணப்படும். வெளிர்ப்பச்சையான, வட்ட அடுக்கில் அமைந்த இலைகளை உடைய தாவரம், 6 மீட்டர் வரை வளரும். இலைகள் முக்கோணம் அல்லது முட்டை வடிவமானவை, நெருடலான மணம் கொண்டவை. மலர்கள் இள மஞ்சள் நிறமானவை.

வெப்பமண்டல புதர்க்காடுகளில், தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. இதனுடைய மருத்துவப் பயன்களுக்காக வீட்டுத் தோட்டங்களிலும், வேலிகளிலும் வளர்க்கப்படுகின்றது.

தழுதாழை இலை, வேர் ஆகியவை கைப்பு, துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. நோய் நீக்கி உடலைத் தேற்றும்; வாத நோய்களைக் கண்டிக்கும்; உடல் வலியைப் போக்கும். சித்த மருத்துவத்தில் வாத நோய்களைப் போக்கும் அருமருந்தாகத் தழுதாழை உள்ளது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

தொடர்ந்து உபயோகித்து வந்தால் இளம்பிள்ளை வாதத்தால் ஏற்பட்ட முடக்கத்தைச் சரியாக்கும் வல்லமை கொண்டது தழுதாழை என்கின்றனர் மருத்துவர்கள்.

தக்காரி, வாதமடக்கி, நத்தக்காரி ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு. இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

பக்கவாதம் முதலான 80 விதமான வாதநோய்களைப் போக்கும் என்கிறது சித்த மருத்துவம். தழுதாழையைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால், `பாலவாதம்‘ எனப்படும் இளம்பிள்ளை வாதத்தால் ஏற்படும் முடக்கநிலை நீங்கும்.

மாந்தம், மூக்கடைப்பு சம்பந்தப்பட்ட நோய்கள், கழலை, சொறி, சிரங்கு, கப மிகுதியால் ஏற்படும் காய்ச்சல், உடல்கடுப்பு, குடைச்சலை நீக்கும்.

வாதவலி குணமாக 1 பிடி இலைகளை, 1 வாளி நீரில் இட்டுக் கொதிக்கவைத்து அந்த நீரால் குளிக்க வேண்டும். மேலும் இரவில், இலைகளை வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் கட்ட வேண்டும்.

சுளுக்கு, மூட்டுவலி குணமாக தழுதாழை இலைகளைக் கழுநீரில் வேகவைத்து, துணியில் முடிந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும் அல்லது இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப்போட வேண்டும்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

காய்ச்சல் குணமாக இலைச்சாறு 3 தேக்கரண்டி அளவு உள்ளுக்குச் சாப்பிட வேண்டும. காலை, மதியம், மாலை வேளைகளில் 1 நாள் மட்டும் சாப்பிடலாம்.

விரை வாதம், நெறிக்கட்டிகள் குணமாக இலைகளை ஆலிவ் எண்ணெயில் வதக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டுப்போட வேண்டும்.

சித்த மருத்துவரின் அனுமதி பெற்று, தழுதாழை இலைச்சாற்றை மூக்கினுள் இரண்டு துளிகள்விட, மூக்கடைப்பு நீங்கும்.

தழுதாழை இலைச்சாற்றை சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து, தினமும் ஒன்றிரண்டு தேக்கரண்டி உட்கொள்ள, மேக நோய்கள் நீங்கும்.

வாதத்தால் ஏற்படும் வலி நீங்க, இதன் இலைகளை ஒன்றிரண்டு கைப்பிடி அளவுக்கு எடுத்து, தேவையான அளவு நீரில் போட்டுக் கொதிக்கவைத்து, மிதமான சூட்டில், வலி ஏற்பட்ட இடங்களில் ஊற்றிக் கழுவ வேண்டும்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர் தழுதாழை இலையை வதக்கி, வலி, வீக்கம் ஏற்படும் இடங்களில் கட்டு போட்டுவர, பிரச்னை தீரும். இதன் இலையை ஆலிவ் எண்ணெய் விட்டு வதக்கி, விரைவாதம் மற்றும் நெறிகட்டிய இடங்களில் கட்டுப்போட, அவை குணமாகும்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

சுளுக்கு, மூட்டு வலி இருப்பவர்கள், இதன் இலையை அரிசி கழுவிய நீரில் வேகவைத்து, துணியில் முடித்து வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். இலைகளை விளக்கெண்ணை விட்டு வதக்கி, வலி ஏற்படும் இடங்களில் பற்று போடலாம்

Related articles

Recent articles

spot_img