அண்ணாமலை வாகனத்தை தாக்க முயற்சி: நடவடிக்கை கோரும் பாஜக.,!

மதுரை
theni bjp complaint
theni bjp complaint

தேனியில் பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வாகனத்தைத் தகர்க்க முற்பட்ட சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக., விவசாயிகள் அணி புகார் அளித்துள்ளது.

செப்.12 ம் தேதி, தேனி பெரியகுளத்துக்கு, முன்னாள் துணை முதல்வரும் அதிமுக., ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த பாஜக., தலைவர் சி.டி. ரவி, பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு எதிராக, பெரியகுளம் பேருந்து நிலையம் அருகில் வாகனத்தை தகர்க்க முற்பட்ட சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட துணை கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தேனி மாவட்ட பாஜக., நிர்வாகிகளுடன் பாஜக விவசாய அணி மாநில தலைவர் G.K.நாகராஜ் புகார் மனு அளித்தார். உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பாஜக.,வினர் கேட்டுக் கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.