health tips - 2026

அப்பாச்சி தீர்வு: காது கரப்பான், மாந்தம்..!

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

அறுசுவையின் மகத்துவம்

நாம் உண்ணும் உணவிலிலுள்ள ஒவ்வொரு சுவைக்கும் தனித்தனி குணங்கள் இருக்கின்றன.

காரம் : உடலுக்கு உஷ்ணத்தை அளிப்பது. உணர்ச்சிகளைக் குறைக்கவும் கூடுதவாக்கவும் பயன்படுகிறது. உடலிலுள்ள கிருமிகளை அழித்து சக்தியை மிகுதியாக்குகிறது.

இனிப்பு : உடலில் தசையை அதிகமாக வளர்க்க உதவுவது.

புளிப்பு : இரத்தக் குழாயிலுள்ள அழுக்கை நீக்கச் செய்வது.

துவர்ப்பு: உடலில் அடிபடும்போது இரத்தம் வெளியேறும் நேரத்தில் உறையச் செய்து இரத்தம் வீணாகாமல் பாதுகாக்கிறது.

உப்பு : ஞாபக சக்தியை அளிக்கிறது.

குழந்தைக்கு மாந்தமா?

  • கடுகு ரோஹினி. கருஞ்சீரகம். சம அளவு எடுத்து அத்துடன் வெங்காயம் ஆறில் ஒரு பங்கு சேர்த்து சுத்தமான அம்மியில் வைத்து தாய்ப்பால் விட்டரைத்து சிறு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். நான்கு மணிக்கொரு முறை ஒரு மாத்திரை வீதம் வெந்நீரில் கரைத்து உள்ளுக்குக் கொடுக்க இரண்டொரு மாத்திரை களிலேயே மாந்தம் சரியாகி விடும்.

மகிழம்பூ மருத்துவம்

  • உலர்ந்த மகிழம்பூவை நன்றாக இடித்து துணியில் சலித்து அதனை மூக்குப் பொடி போன்று உரிந்தால் உடனே தலைபாரம் நீங்கும். தலைவலி போகும். நீரேற்றம் இருந்தால் அதுவும் குணமாகும்.

குழந்தைக்கு ஈரல் குலைக் கட்டியா?

துளசி, தேக்கு, சித்திரத்தை, கிராம்பு, தேசாவரம் வகைக்கு 5 கிராம். பட்டைவேர். தும்பை, விஷ்ணு கிரந்தி, உத்தாமணி நேர் வகைக்கு3 கிராம் இவையனைத்தையும் தட்டிப் போட்டுக் கஷாயம் வைத்து
வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் உள்ளுக்குக் கொடுத்து வர சில நாள்களில் குணமாகும்.

காது கரப்பானுக்கு…

பூங்காவி வாங்கி வந்து புதிய மண் சட்டியிலோ அல்லது மண் ஓட்டிலோ நீர் விட்டு உரைத்து காது கரப்பான் மீது பற்றுப் போட்டு வர இரண்டொரு நாள்களில் சரியாகி விடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.