
இன்றைய பஞ்சாங்கம் – செப்.24
ஶ்ரீராமஜயம் ஜய்ஸ்ரீராம் ஜய்ஸ்ரீராம்
||श्री:|| !!ஸ்ரீ:!!
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
புரட்டாசி ~ 7 ( 24.9.2026 ) வியாழன் கிழமை.
வருடம் ~ பராபவ { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயணம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ வர்ஷ ருது.
மாதம் ~ புரட்டாசி மாஸம் { கன்யா மாதம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ இரவு 11.04 PM வரை த்ரயோதசி பின் சதுர்தசி.
நாள் ~ { குரு வாஸரம் } வியாழன் கிழமை.
நட்சத்திரம் ~ பகல் 11.06 AM வரை அவிட்டம் பின் சதயம்.
யோகம் ~ த்ருதி.
கரணம் ~ கௌலவம் / தைதுளை.
அமிர்தாதியோகம்~ சுபயோகம் / அசுபயோகம்.
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 AM & மாலை 5.00 ~ 6.00 PM.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00 PM.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30 AM
குளிகை ~ காலை 9.00 ~ 10.30 AM.
சூரிய உதயம் ~ காலை 6.05 AM.
சந்திராஷ்டமம் ~ கடகம்.
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~ நல்லெண்ணெய்.
ஸ்ராத்ததிதி ~ த்ரயோதசி.
இன்று ~ ப்ரதோஷம்.
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!

சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.
காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை
பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை
இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை

இன்றைய ராசிபலன்கள்
24.9.2026
மேஷம்
குடும்பத்தாரின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். உடன் இருப்பவர்களால் பொறுப்புக்கள் மேம்படும். நண்பர்களின் வருகை உண்டாகும். வியாபார முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையில் மேன்மை அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
அஸ்வினி : பொறுப்புக்கள் மேம்படும்.
பரணி : மதிப்புகள் உயரும்.
கிருத்திகை : மேன்மையான நாள்.
ரிஷபம்
வியாபாரத்தில் இருந்த மந்த நிலை குறையும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கனிவான பேச்சுகள் ஆதரவை மேம்படுத்தும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சில நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
கிருத்திகை : நம்பிக்கை அதிகரிக்கும்.
ரோகிணி : ஆதரவு மேம்படும்.
மிருகசீரிஷம் : புதுமையான நாள்.
மிதுனம்
தம்பதிகளுக்குள் புரிதல் அதிகரிக்கும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் சுப செயல்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் சிறுசிறு தாமதம் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் முக்கியத்துவம் ஏற்படும். வழக்கு விஷயங்களில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். மருத்துவத் துறையில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்
மிருகசீரிஷம் : வரவுகள் கிடைக்கும்.
திருவாதிரை : தாமதம் நீங்கும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் ஏற்படும்.
கடகம்
எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். பழைய பிரச்சனைகளால் மனதில் கோபம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் விட்டுக் கொடுத்து செயல்படவும். கடன் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாக கிடைக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
புனர்பூசம் : நெருக்கடியான நாள்.
பூசம் : விட்டுக் கொடுத்து செயல்படவும்.
ஆயில்யம் : வாதங்களில் கவனம்.
சிம்மம்
கணவன்-மனைவியிடையே இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். தாய்மாமன் வழியில் சுபகாரிய செலவுகள் உண்டாகும். நிதானமான செயல்பாடுகள் வெற்றியை உருவாக்கும். வேலையாட்கள் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த புதிய பொறுப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மகம் : வேறுபாடுகள் குறையும்.
பூரம் : மாற்றங்கள் பிறக்கும்.
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
கன்னி
நிலுவையில் இருந்து வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்கள் இடத்திலிருந்து வந்த வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் எதிலும் செயல்படுவீர்கள். சமூகப் பணிகளில் ஆதரவுகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் உழைப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
உத்திரம் : வேறுபாடுகள் குறையும்.
அஸ்தம் : தேவைகள் நிறைவேறும்.
சித்திரை : ஆதரவுகள் மேம்படும்.
துலாம்
இணைய பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இனம் புரியாத சிந்தனைகள் மூலம் கற்பனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பதற்றம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஆர்வம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : முன்னேற்றமான நாள்.
சுவாதி : கற்பனைகள் மேம்படும்.
விசாகம் : ஆர்வம் உண்டாகும்.
விருச்சிகம்
மனதில் புதிய திட்டங்கள் உருவாகும். அக்கம் பக்கம் இருப்பவர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவுகள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். புதுமையான சிந்தனைகள் மனதில் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
விசாகம் : புரிதல்கள் அதிகரிக்கும்.
அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : முன்னேற்றமான நாள்.
தனுசு
சில பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வாகனங்களை வாங்க திட்டமிடுவீர்கள். அரசு வழியில் ஆதரவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்விப் பணிகளில் இருந்த மந்தத்தன்மை குறையும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்
மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூராடம் : ஆதரவுகள் ஏற்படும்.
உத்திராடம் : மாற்றங்கள் ஏற்படும்.
மகரம்
குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் விலகும். சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பொன் பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். பேச்சுகளுக்கு மதிப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்டதிசை : வடகிழக்கு
அதிர்ஷ்டஎண் : 3
அதிர்ஷ்டநிறம் : வெளிர் நீல நிறம்
உத்திராடம் : வேறுபாடுகள் விலகும்.
திருவோணம் : ஆர்வம் மேம்படும்.
அவிட்டம் : திருப்தியான நாள்.
கும்பம்
சூழ்நிலை அறிந்த கருத்துக்களை வெளிப்படுத்தவும். சிந்தனைகளில் ஒரு விதமான தடுமாற்றம் ஏற்படும். வரவுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தம்பதிகளுக்குள் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வேலையாட்களால் அலைச்சல்கள் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் பொறுமை வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
அவிட்டம் : மாற்றம் ஏற்படும்
சதயம் : வாதங்கள் மறையும்.
பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
மீனம்
அவசரமான முடிவுகளை தவிர்க்கவும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். எதிர்மறை சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபார முதலீடுகளில் ஆலோசனை வேண்டும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சக ஊழியர்களிடத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
பூரட்டாதி : முடிவுகளில் கவனம்.
உத்திரட்டாதி : ஆலோசனை வேண்டும்.
ரேவதி : வாதங்களை தவிர்க்கவும்.
இன்றைய நற் சிந்தனைகள்
விடாமுயற்சி
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill
நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.

தினம் ஒரு திருக்குறள்
நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்
அதிகாரம் : படைச்செருக்கு
குறள் 775
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.
இன்றைய சிந்தனைக்கு
”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”
‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…
எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…
மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !
பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!
நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!
இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!
ஆம் நண்பர்களே…!
‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!
?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??
- தினசரி.காம்


ரிஷபம௠ராசி ரோகிணி நடà¯à®šà®¤à¯à®¤à®¿à®°à®®à¯ கடகà¯à®• லகà¯à®•னம௠பிறநà¯à®¤ தேதி
௨௦.௦௮.௧௯௮௫ நேரம௠காலை ௪.௩௦மà¯