ஜெயின்ட் வீல் விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி பலி

இந்தியா சற்றுமுன்

12 May28 gaint wheel crash - 2026ஆந்திராவின் அனந்த்பூர் மாவட்டத்தில் ஜெயின்ட் வீல் விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி ஒருவர் பலியானதாகவும், மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து நேற்று இரவு நடைபெற்றது என்றும், அந்த ஜெயின்ட் வீல்லில் ஒரு போல்ட் சரியாக பொருத்தப்படமால் இருந்தது என்றும், அதை அங்கிருந்த ஊழியரிடம் தெரிவித்தும் அவர் மது அருந்தி இருந்ததால், அதை சரி செய்யவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமி இறந்ததை தொடர்ந்து, உள்ளூர் மக்கள் அந்த ஊழியரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பலியான சிறுமி அமிருத்தா, அனந்தபூர் ஜூனியர் காலேஜ் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாவுக்கு வந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.