குடும்ப பிரச்னை… 3 வயது குழந்தையை கயிறால் இறுக்கிக் கொன்ற கொடூரத் தாய்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்

karur child murder - 2026 கரூர் அருகே குடும்ப பிரச்சினைக்காக 3 வயது குழந்தையை கயிற்றால் இறுக்கி கொன்றுவிட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற கொடூர தாய் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த பரளி என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் ரம்யா. 24 வயதான இவருடைய குழந்தைதான் 3 வயதான வேதாவர்ஷினி.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக திருச்சி மாவட்டம் கொளக்குடி பகுதியைச் சேர்ந்த தங்கதுரை என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா, பின்னர் தனது கள்ளக்காதலன் மணிமாறன் உடன் தொடர்பில் இருந்ததால் கணவனை வெறுத்து ஒதுக்கிவிட்டு, மணிமாறன் உடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் வேதாவர்சினி.

ரம்யாவுக்கும் மணிமாறனுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த ரம்யா இன்று தனது மகள் வேதாவர்சினியை கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார். மேலும் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் ரம்யாவை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பெற்ற தாயே குழந்தையைக் கொன்ற கொடூரம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.