கணபதி சொல்லும் கேட்பான் – சிவ
கணங்களுக்குப் பொருளு மாவான் – தன்
தளபதி நந்தி போற்றும் – இசைத்
தாளத்தில் தன்னைத் தோற்பான் .

கந்தனைக் குருவாய் ஏற்றான் – ஒங்
காரத்தின் பொருளைக் கேட்டான் – தனை
நிந்தனை செய்வோர் மகிழ – திரு
நீறிட்ட ணைக்கும் கரத்தான்.

கேள்விகள் கேட்க நினைத்தால் – அவன்
விடையேறி வருகிறான் முன்னே – என்
தோள்களில் அவனைச் சுமந்தால் – தனி
சுகமொன்று தருகிறான் பின்னே.

நாளெலாம் அவன்பேர் உரைத்தால் – அவன்
நற்பிறவி தருவான் நமக்கே – நவ
கோளெலாம் நலமே அருள -சிவ
குடும்பத்தில் கொள்வான் நமையே.

(இன்று (04.12..2018) பிரதோஷம்)

கவிதைப் பாடல்: மீ.விசுவநாதன்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...