மகிழ்ச்சியை பகிருங்க… வதந்திகளை அல்ல..! வாட்ஸ்அப்பின் முதல் டிவி., விளம்பரம்!

Published:

whatsapp tv commercial - 2026

புதுதில்லி: சமூகத் தளமான, ‘வாட்ஸ்அப்’பில் பரப்பப் படும் வதந்திகளால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் குறித்து, பொதுமக்கள் அறியும் வகையில் ‘டிவி’க்களில், விளம்பரப் படங்களை ஒளிபரப்பி விழிப்பு உணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளது வாட்ஸ்அப். அதன்படி முதல் விளம்பரப் படம் ஒளிபரப்பானது. உங்கள் மகிழ்ச்சியைப் பகிருங்கள், வதந்திகளை அல்ல என்னும் தலைப்புடன் விளம்பரப் படம் ஒளிப்பரப்பப் படுகிறது.

சமூக வலைதளமான, ‘வாட்ஸ்அப்’பில் பரவிய வதந்திகளால் அண்மைக் காலமாக 25க்கும் மேற்பட்டோர் கும்பல் தாக்குல் நடவடிக்கையில் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது.

இந்நிலையில், வாட்ஸ்அப்’பில் பரவும் வதந்திகளைத் தடுக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கும்படி அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு ‘நோட்டீஸ்’ அனுப்பியது. இதைத் தொடர்ந்து, ‘வாட்ஸ்அப்’பில் பரவும் வதந்திகளைக் கண்காணிக்க அந்த நிறுவனம் சார்பில், கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் ‘டிவி’ விளம்பரங்கள் மூலம் மற்றும் விளம்பரப் படங்கள் மூலம் ‘வாட்ஸ்அப்’பில் பரவும் வதந்திகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது சர்வதேச அளவில் குறிப்பாக இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதல் முயற்சி!

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

இந்தியாவில்தான் முதன் முதலில் இந்த நிறுவனத்தால் ஏற்படுத்தப் படும் விளம்பரப் படங்கள் ஒளிபரப்பப் படுகின்றன. 60 வினாடிகள் ஓடும் மூன்று விளம்பரப் படங்களை, வாட்ஸ்அப் நிறுவனம் தயாரித்துள்ளது. அவற்றில் முதல் விளம்பரப் படம் திங்கள் கிழமை டிவி.,க்களில் ஒளிபரப்பானது.

இதற்கு முன்னர் ரேடியோ விளம்பரங்களை உருவாக்கி, கடந்த ஆக.29 முதல் ஆலிண்டியா ரேடியோவின் 46 வானொலி நிலையங்களில் ஒலிபரப்பானது! அஸாம், திரிபுரா, மேற்கு வங்கம், குஜராத், கரநாடகம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, ஒரிஸா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த விளம்பரங்கள் ஒலிபரப்பாயின.

இந்நிலையில் டிவி மூலமான விளம்பரங்களாக, சிர்ஷா குஹா தகுர்தா என்ற படத்தயாரிப்பாளர் மூலமாக 60 நொடிகள் ஓடும் விளம்பரங்களை தயாரித்துள்ளது வாட்ஸ்அப். இவை, டிவி., பேஸ்புக், யுடியூப் உள்ளிட்டவற்றில் ஒன்பது மொழிகளில் ஒளிபரப்பாகின்றன.

விளம்பரம் – 1: 

விளம்பரம் – 2:

விளம்பரம் – 3:

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img