
சோழவந்தான் வைத்தியநாதபுரத்தில்…
சோழவந்தான் வைத்தியநாதபுரம் அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் ஸ்ரீ நொண்டி கருப்பணசாமி ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகே வைத்தியநாதபுரம் காட்டுநாயக்கன் சிவகங்கை ராமன் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஸ்ரீ வெள்ளையம்மாள் சுவாமி, ஸ்ரீ பொம்மி அம்மாள் , சுவாமி ஸ்ரீ நொண்டி கருப்பு சுவாமிகளின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பிரசாத் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை பூஜையினை நடத்தினர். தொடர்ந்து காலை கடம் புறப்பாடாகி திருக்கோவிலை சுற்றி வலம் வந்து கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது . அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது.
தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவ பொடி இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு அன்னதானம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சிவகங்கை ராமன் வகையறாக்கள் காட்டுநாயக்கன் சமூகத்தினர் செய்திருந்தனர்.
சோழவந்தான் அருகே நெடுங்குளத்தில்…
சோழவந்தான் அருகே நெடுங்குளம் அருள்மிகு வெங்கலநாதமுடைய அய்யனார் கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பூர்ணகலாதேவி புஷ்ப கலாதேவி சமேத வெங்கலநாதமுடைய அய்யனார் திருக்கோவில் மூன்றாவது வருடாந்திர அபிஷேக விழா நடைபெற்றது. திருக்கோவில் அர்ச்சகர் முருகன் புனித தீர்த்தங்களை கொண்டு வந்து சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து தொடர்ந்து பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் பிச்சைமணி மற்றும் நெடுங்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
பாலமேட்டில் …
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஸ்ரீ செல்வ விநாயகர் சோனியா சுவாமி வீரகாளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், பாலமேட்டில் ஸ்ரீ செல்வ விநாயகர் சோணையாசாமி கோவில்கும்பாபிஷேக மூன்றுகால யாக பூஜையுடன் ,அழகர் கோவில் |ராமேஸ்வரம், கரந்தமலை காசி உட்பட புண்ணிய தீர்த்தங்கல் கொண்டு வரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடகி திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவில், பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சோழவந்தான் எம். எல். ஏ. வெங்கடேசன் பாலசுப்பிரமணியம் ஒன்றியச் செயலாளர் தன்ராஜ் பரந்தாமன் முத்தையன் அருண்குமார் . சுற்று வரலாறு கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர் , பாதுகாப்பு ஏற்பாடுகளை,
பாலமேடு போலீசார் செய்திருந்தனர்.





