அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜர்!

இந்தியா
chidambaram karthi - 2026

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் இன்று அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வந்து இருந்தார்

ஜாம்நகரில் உள்ள அமலாக்கத்துறையின் அலுவலகத்துக்கு ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக அவர் இன்று ஆஜரானார்.

முன்னதாக பிப்ரவரி 7 ஆம் தேதி நேற்று சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறையின் கேள்விகளுக்கு பதிலளிக்க ஆஜரானார்! கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் வெளிநாட்டு நிதி பெறுவதற்காக லஞ்சம் கொடுக்கப் பட்ட விவகாரத்தில் அப்ரூவராக விரும்புவதாக இந்திராணி முகர்ஜி கூறியுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதனால் சிதம்பரம் குடும்பத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகின

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு அமலாக்கத் துறையின் முன் சிதம்பரம் ஆஜராகி உள்ளது குறிப்பிடத்தக்கது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.